உனக்கு என்ன அஜித் கவலை!. சினிமா வாழணுமா சாகணுமா?!.. பொங்கிய பிரபலம்..

Published on: July 27, 2023
ajith
---Advertisement---

சாக்லேட் பாயாக பல திரைப்படங்களில் நடித்து பின்னர் மாஸ் ஹீரோவாக மாறியவர் நடிகர் அஜித்குமார். பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் அஜித்தை மாஸ் ஹீரோ ஆக்கியதோடு அவருக்கென ரசிகர்களையும் உருவாக்கியது. ரசிகர்கள் இவரை தல தல என உயிரை விடுகின்றனர். ஆனால், அஜித்தோ தனது ரசிகர் மன்றத்தையும் கலைத்துவிட்டு தனக்கு பிடித்ததை செய்யும் நபராக வலம் வருகிறார்.

ajith
ajith

அஜித்தை பொறுத்தவரை சினிமா என்பது அவரின் தொழில் மட்டுமே. அவருக்கு எப்போது நடிக்க வேண்டும் என தோன்றுகிறதோ அப்போது நடிப்பார். விருப்பம் இல்லையெனில் பைக்கை எடுத்துக்கொண்டு ஊர் சுற்ற கிளம்பிவிடுவார். அது அவரின் சொந்த விஷயம் என்றாலும் அவர் சார்ந்திருக்கும் சினிமா உலகை எந்த வகையிலும் அவர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்கிற விமர்சனம் அவர் மீது இருக்கிறது.

நடிப்பதோடு சரி. அவர் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சியில் கூட கலந்துகொள்ள மாட்டார். அவருக்கு எதைப்பற்றியும் கவலையும் இல்லை. சம்பளம் வாங்கினோமா.. நடித்தோமா அவ்வளவுதான். அவரின் ரசிகர்கள் பற்றியோ, அவர்களின் எதிர்பார்ப்பு பற்றியோ எந்த கவலையும் படமாட்டார். வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டே அவரின் ரசிகர்களுக்கு வயசாகிப்போனது.

ajith1
ajith1

பல நடிகர்கள் சினிமாவில் நடித்தாலும் ரஜினி, கமல், விஜய்,அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்குதான் ரசிகர்கள் அதிக அளவுக்கு தியேட்டருக்கு வருவார்கள். 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் வருடத்திற்கு குறைந்தது பெரிய நடிகர்களின் 4 அல்லது 5 படங்கள் வெளியாகும். ஆனால், இப்போது வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே வெளியாகிறது.

இதையும் படிங்க: கங்கை அமரன் அடித்த கமெண்ட்!. கடுப்பான பாலச்சந்தர்!. இளையராஜாவின் பிரிவுக்கு முதல் பொறி!..

துணிவு படம் வெளியாகி 6 மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இந்த இடைவெளியில் அஜித்தின் போட்டியாளராக கருதப்படும் விஜய் லியோ படத்தில் நடித்தே முடித்துவிட்டார். ஆனால், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கூட இன்னும் துவங்கவில்லை. அஜித்தை நம்பி அப்பட இயக்குனர் மகிழ் திருமேனி பல மாதங்களாக காத்திருக்கிறார். ஆனால், அஜித்தோ பைக்கை எடுத்துக்கொண்டு சுற்றுப்பயனம் போய்விட்டார். இன்னமும் கூட எப்போது படப்பிடிப்பு என்பதில் அஜித் ஒரு முடிவுக்கு வரவில்லை என செய்திகள் கசிந்துள்ளது.

rajan

இந்நிலையில், சினிமாவை பற்றி பல ஊடகங்களிலும் காட்டமாக பேசும் தயாரிப்பாளர் கே.ராஜன் ‘சினிமாவை நம்பி லட்சக்கணக்கான குடும்பம் இருக்கிறது. அஜித் போன்ற நடிகர்கள் வருடத்திற்கு 2 படங்களாவது நடித்தால்தான் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், ஊழியர்கள், சினிமாவை நம்பி குடும்பம் நடத்தும் தொழிலாளர்கள் என எல்லோரும் வாழ்வார்கள். இன்னமும் அஜித் விடாமுயற்சி படத்துக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. அந்த இயக்குனரும் பாவம். பொறுமையாக அவரின் வேலையை செய்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு சீக்கிரம் துவங்கினால் நல்லது’ என பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ஜூம் பண்ணி பார்த்தா கிறுகிறுன்னு வருது!.. முன்னழகை முழுசா காட்டி தூக்கத்தை கெடுக்கும் தமன்னா!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.