சூர்யாவை காதல் பரத்தா மாத்தாம இருந்தா சரி! ‘கங்குவா’ படத்தில் இப்படி ஒரு ஐடியாவ கொடுத்த புண்ணியவான்

Published on: July 27, 2023
surya
---Advertisement---

சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். 12 மொழிகளில் தயாராகி வரும் இந்த கங்குவா திரைப்படம் ஞானவேல் ராஜா தயாரிப்பில் தயாராகிக் கொண்டு வருகிறது. சமீபத்தில் கங்குவா திரைப்படத்தின் போஸ்டர்கள், வீடியோக்கள் என வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்தப் படம் ஏற்கனவே ஒரு ஹிஸ்டாரிக்கல் நிகழ்வையும் தற்கால நிகழ்வையும் தொடர்பு படுத்தி அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதுவும் சிறுத்தை சிவா எப்படி இந்த மாதிரியான ஒரு படத்தை எடுக்கப் போகிறார் என்ற ஒரு ஐயமும் கோடம்பாக்கத்தில் இருந்து வந்தது.

surya1
surya1

அதன் பிறகு தான் இந்த படம் ஒரு மறுபிறவி கதையை மையமாக வைத்து உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ராம்சரண் நடிப்பில் வெளிவந்த மாவீரன் படத்தின் கதையும் ஒரு மறுபிறவி கதை போல தான் இருக்கும். அதே மாதிரியான ஒரு கதை வடிவமைப்பு தான் இந்த கங்குவா திரைப்படத்தில் அமைய இருக்கிறதாம்.

சரி சிறுத்தை சிவாவுக்கு எப்படி இந்த மாதிரி ஒரு ஐடியா வந்தது என விசாரித்ததில் அவருக்கு பின்னணியில் அவருடைய நண்பர் ஒருவர் சிவாவுக்கு ஐடியா பேங்காக இருந்து சில வேலைகளை செய்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க : சின்ன பொண்ணுங்க தான் வேணும்!.. அடம்பிடிக்கும் 70 வயது நடிகர்.. அப்போ ரம்யா பாண்டியன்.. இப்போ யாரு தெரியுமா?

surya3
surya3

அவர்தான் இந்த ஐடியாவையும் கங்குவா திரைப்படத்திற்காக சிறுத்தை சிவாவிடம் சொல்லி இருக்கிறாராம். மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களின் ஸ்கிரிப்டுகளிலும் இந்த நண்பரின் தலையீடு தான் இருந்ததாம்.

எப்படியோ மறுபிறவி அடுத்த ஜென்மம் என சூர்யாவை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டார் போல சிறுத்தை சிவா என ரசிகர்கள் கூறி வருகின்றன. இன்னும் சிலர் காதல் பரத் போல சூர்யாவின் நிலைமை எப்படி ஆகப்போகின்றதோ என்றும் கூறி வருகிறார்கள்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.