சரக்கடிச்சி ஆட்டம்போட்டு வசமா மாட்டிய நடிகைகள்.. போதும் போதும் லிஸ்டு பெருசா போகுது..

Published on: July 27, 2023
trisha yashika
---Advertisement---

பெரும்பாலான சினிமா நடிகர், நடிகைகள் மதுவுக்கு அடிமையானவர்கள் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சினிமாவில் இருந்துகொண்டு மது பழக்கம் இல்லாமல் இருக்க முடியாது என்பார்கள். ஆனால் அதெல்லாம் வெளியே தெரியாது. எப்போதாவது சிலர் பொதுவெளியில் அல்லது பத்திரிக்கையாளர்களிடம் மாட்டிக்கொண்டால் தான் தெரியும். அப்படி சரக்கடித்து மாட்டிக்கொண்ட நடிகைகளை பற்றி பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

யாஷிகா ஆனந்த்

yasika

நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு பெரிய விபத்தில் சிக்கி நூழிலையில் உயிர் பிழைத்தார் என்பது நமக்கு தெரியும். அந்த விபத்தில் அவரது தோழி ஒருவர் உயிரிழந்தார். பல மாதங்கள் ஓய்வுக்கு பிறகு யாஷிகா குணமடைந்தார். அந்த விபத்திற்கு காரணமே யாஷிகா மது அருந்தியிருந்தது தான் என்றும் அவர் தான் அந்த காரை ஓட்டினார் என்று பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

புவனேஸ்வரி

bhuvaneshwari

நடிகை புவனேஸ்வரி பல படங்களில் க்ளாமர் ரோல்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் பல பாடல்களுக்கு ஐடம் டான்ஸ் ஆடியுள்ளார். இவர் வீட்டில் ரெய்டு நடந்த போது, மது, போதை பொருட்கள் ஏதோ சிக்கியுள்ளது. இதனையடுத்து கடுப்பான புவனேஸ்வரி, நான் மட்டும் தான் இதெல்லாம் பண்றேனா, நயன்தாரா கூட தான் செய்றாங்க என அவரையும், மேலும் சில நடிகைகளின் பெயரையும் கூறிவிட்டார் புவனேஸ்வரி. இது சில பத்திரிக்கைகளில் கூட அந்த சமயத்தில் செய்தியாக வெளியானது என்று அவர் கூறியுள்ளார்.

சில்க் ஸ்மிதா

silk smitha

நடிகை சில்க் ஸ்மிதா நடிக்காவிட்டால், அந்த படம் ஓடாது என்று கூறும் அளவிற்கு புகழின் உச்சியில் இருந்தார் இவர். ஆனால் அவரும் கடைசி காலங்களில் விரக்தியில் மதுவுக்கு அடிமையாகி இருந்தார். ஒரு மருத்துவரை காதலித்து, அவர் கெட்டவர் என்று தெரிந்ததும், மனமுடைந்து மதுவுக்கு அடிமையாகிவிட்டார் என்று செய்யாறு பாலு கூறியுள்ளார். 

மனிஷா கொய்ராலா

manisha koirala

நடிகை மனிஷா கொய்ராலா முதல்வன், பாபா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் காதல் தோல்வியால் விரக்தி அடைந்து சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகி பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார். இந்த பழக்கத்தால் தான் இவரது சினிமா வாழ்க்கை கேள்விக்குறியானது என்றும் செய்யாறு பாலு கூறியுள்ளார்.

த்ரிஷா

trishaa

நடிகை த்ரிஷாவிடம் சென்னை சைதாபேட்டையில் ஆறு பட படப்பிடிப்பின் போது, ஒரு நபர் பர்மா பஜாரில் இருந்து ஒரு சரக்கு பாட்டில் வாங்கி வந்து கொடுத்ததாகவும், அதனை எடுத்து அவர் தன் பையில் போட்டுக்கொண்டாதாகவும் இதை அங்கிருந்தவர்கள் எல்லாம் பார்த்தார்கள், நானும் பார்த்தேன் என்று அந்த பேட்டியில் செய்யாறு பாலு கூறியுள்ளார்.

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.