Connect with us

Cinema News

மனைவி விட்டுப் போனாலும்!.. மாமனாரை மறக்காத தனுஷ்!.. கேப்டன் மில்லர் ரிலீஸ் எப்போ தெரியுமா?..

துள்ளுவதோ இளமை படத்தில் 16 வயது தனுஷாக திரையில் தோன்றி ரசிகர்களை எப்படி சந்தோஷாத்தில் ஆழ்த்தினாரோ அதே போலத்தான் 40 வயதிலும் வாத்தி படம் மூலமாக இந்த ஆண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தார் தனுஷ்.

நடிகர் தனுஷ் தனது 40வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், அதனை முன்னிட்டு தனது ரசிகர்களுக்காக நள்ளிரவு 12.01க்கு கேப்டன் மில்லர் டீசரை வெளியிட்டார்.

கேப்டன் மில்லர் டீசரை பார்த்த ரசிகர்களும் சினிமா பிரபலங்களும், என்ன மனுஷன்யா இவர் என இணையத்தில் பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர். மேலும், படத்தின் ரிலீஸ் தேதியில் தான் செம ஹைலைட்டான விஷயத்தை நடிகர் தனுஷ் வைத்திருக்கிறார்.

பிறந்தநாள் ட்ரீட்: 

இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு மகனாக பிறந்து அவர் கடனில் கஷ்டப்படும் போது ஹீரோவாக மாறி அப்பாவுக்கு பக்க பலமாக அண்ணன் செல்வராகவன் உடன் கைகோர்த்து தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த தனுஷ் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை மணந்து சூப்பர்ஸ்டார் மகனாக வலம் வந்த தனுஷ் தனது மனைவியை பிரிந்தாலும் இன்னமும் தனது இரு மகன்களையும் அன்பாக கவனித்து எங்கே சென்றாலும் மகன்களையும் அழைத்துச் சென்று வருகிறார். நடிகர் தனுஷுக்கு 40 வயது என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள், அந்த அளவுக்கு வாத்தி படம் வரை யங் பாயாக மாறி நடித்து தனது தோளுக்கு வளர்ந்த மகன்களுடனே போட்டிக்கு நிற்கும் அப்பாவாக உள்ள தனுஷ் தனது ரசிகர்களுக்கு 40வது பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் டீசரை ட்ரீட்டாக கொடுத்துள்ளார்.

தமிழில் ஒரு பிரம்மாண்டமான போர் சினிமா: 

ஹாலிவுட் படங்களில் அதிகமாக போர் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பாக எடுப்பார்கள். தமிழில் பெரிதும் கமர்ஷியல் மசாலா படங்கள் தான் குவிந்து வருகின்றன. இந்நிலையில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இந்த முறை தமிழில் ஒரு பிரம்மாண்டமான போர் சினிமாவாக கேப்டன் மில்லர் படத்தை உருவாக்கி உள்ளார் என்பது அதன் டீசரை பார்த்தாலே தெளிவாக தெரிகிறது.

போராளியாக தனுஷ் நீண்ட முடியுடனும் தாடியுடனும் தோன்றும் ஒவ்வொரு காட்சிகளுமே ரசிகர்களை புல்லரிக்கச் செய்து விடுகிறது.

மாமனாரை மறக்காத தனுஷ்: 

தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் என கேப்டன் மில்லர் படத்தில் ஒவ்வொரு நடிகர்களும் மிரட்டி உள்ளனர். டீசரின் இறுதியில் கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 12ம் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் என்பது உலகத்துக்கே தெரியும். இந்நிலையில், டிசம்பர் 15ம் தேதி கேப்டன் மில்லர் படத்தை சூப்பர்ஸ்டார் பிறந்தநாள் கொண்டாட்டமாக தனுஷ் வெளியிடுகிறாரா என்றும் மனைவி விட்டுப் பிரிந்தாலும், மாமனாரை இன்னும் தனுஷ் தனது தலைவராகவே பார்த்து வருகிறார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top