Connect with us

latest news

தோனியை காலி பண்ணாம விடமாட்டாங்க போல!.. இவானாவ நம்பி ஏமாந்துடாதீங்க.. LGM விமர்சனம் இதோ!..

கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய நிலையில், தோனி தயாரிப்பில் உருவாகும் முதல் தமிழ் படமான LGM – Lets Get Married தரமான படமாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையே இந்த எல்ஜிஎம் கொடுத்துள்ளது.

இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி தோனியை வைத்து அனிமேஷன் படமான அதர்வா படத்தை உருவாக்குகிறேன் என உள்ளே நுழைந்து அப்படியே ஐஸ் வைத்து எல்ஜிஎம் படத்தையே இயக்க பிட்டு போட்டு பட வாய்ப்பையும் பெற்று விட்டார்.

தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி சொன்ன கதையை திரைக்கதையாக்கி ரமேஷ் தமிழ்மணி இயக்கி, இசையமைத்து எடுத்துள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே இவானா, நதியா, ஆர்ஜே விஜய் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எல்ஜிஎம் விமர்சனம்: 

லவ் டுடே படம் போல சூப்பரான படத்தை கொடுக்கிறேன் என தோனியை பிரைன் வாஷ் செய்து தயாரிப்பு நிறுவனத்தையே ஆரம்பிக்க வைத்து சாக்‌ஷி தோனி பல்பு வாங்கி விட்டாரா? அல்லது சாக்‌ஷி தோனி சொன்ன ஒன்லைன் சூப்பராக இருந்தும் அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி அதனை ஒழுங்காக கட்டமைக்கவில்லையா? என்றே தெரியவில்லை.

யூனிவர்ஸல் பிரச்சனையான அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையே மாட்டித் தவிக்கும் ஒரு கணவனின் கதையாக எல்ஜிஎம் படத்தின் ஒன் லைன் இருந்தும் எங்கேயுமே எமோஷனல் கனெக்ட் ஆகாமல் ஒரு உப்புமா படத்தை கிண்டி கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி.

சேப்பாக்கத்தில் நடக்கும் சிஎஸ்கே போட்டி போல விறுவிறுப்பாக இருக்கும் என்று பார்த்தால், மும்பைக்கு சென்று சென்னை அடிவாங்கி வருவது போல படம் ரொம்பவே டல் அடிக்கிறது.

மருமகளும் மாமியாரும் பழகி பார்த்தால்:

ஹரிஷ் கல்யாணை காதலிக்கும் ’லவ் டுடே’ இவானா திருமணத்துக்கு பிறகு சிங்கிள் மதராக இத்தனை ஆண்டுகள் பெத்து வளர்த்து ஹேண்ட்ஸம் பாயாக ஹரிஷ் கல்யாணை உருவாக்கி விட்டு அப்படியே தனியா விட்டு விட வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார்.

அம்மா தான் முக்கியம் என காதலியையே தூக்கி எறிய முடிவு செய்யும் ஹரிஷ் கல்யாணுக்கு நான் ஒரு ஐடியா சொல்லட்டா என இவானா ரம்பம் போட ஆரம்பித்து விடுகிறார்.

திருமணத்துக்கு முன்பாக மணமகனும் மணமகளும் பழகிப் பார்க்க வேண்டும் என்பது எல்லாம் பழைய கதை என்றும் திருமணத்துக்கு முன்பாக மருமகளும் மாமியாரும் பழகி பார்க்க வேண்டும் என்கிற புதிய கதையை எடுத்துக் கொண்டு இப்படி கோட்டை விட்டு இருப்பது தான் கடுப்பை கிளப்புகிறது.

மாமியாருடன் பழகிப் பார்க்க குடும்பமாக கூர்குக்கு சுற்றுலா செல்கின்றனர். அந்த டூர் என்ன காரணத்திற்காக என்பது நதியாவுக்கு தெரிய வந்ததும் என்ன ஆகிறது என்பது தான் எல்ஜிஎம் படத்தின் கதை. மருமகளும் மாமியாரும் உண்மையிலேயே பழக ஆரம்பித்தால் பலருக்கும் இங்கே திருமணம் ஆகாதே என தியேட்டரிலேயே பலரும் புலம்ப ஆரம்பித்து விடுகின்றனர்.

சுத்தலில் விட்ட கதை: 

கூர்க் டூருடன் படத்தை முடித்திருந்தாலே சிறப்பாக இருந்திருக்கும், அங்கிருந்து காபி வித் காரம் வெப்சீரிஸ் போல கதை அப்படியே கோவாவுக்கு டிராவல் ஆகி மாமியாரும் மருமகளும் பார், பப் என லூட்டி அடிப்பது எல்லாம் படத்திற்கு பலமாக இல்லாமல், பெரும் பலவீனமாக மாறி விடுகிறது.

மேலும், கடைசியில் அந்த புலியிடம் மாட்டி எஸ்கேப் ஆவதெல்லேம் வேறலெவல் தலைவலி காட்சிகள் என்று தான் சொல்ல வேண்டும். ஆர்ஜே விஜய் சிரிக்க வைக்கும் அளவுக்கு கூட இந்த படத்தில் தேவையே இல்லாமல் வந்து ஒட்டிக் கொள்ளும் யோகி பாபுவின் காமெடிகள் சிரிக்க வைக்கவில்லை.

இந்த படத்தைத் தொடர்ந்து இனிமேலும் தனது மனைவி சாக்‌ஷி தயாரிப்பில் தோனி புதிய படங்களை தயாரிப்பாரா? அல்லது இது நமக்கு செட்டாகாது என சைலன்ட் ஆகிவிடுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

எல்ஜிஎம் – டக் அவுட்!

ரேட்டிங்: 2/5.

 

google news
Continue Reading

More in latest news

To Top