பல ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா, பாலா கூட்டணி மீண்டும் இணையப் போகிறது என அறிவிப்பு வெளியானது. இதனால் அவர்களின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். இந்த படத்தை சூர்யாவே தயாரிக்கவுள்ளார் என்று இந்த படத்தின் பெயர் வணங்கான் என்றும் அறிவிப்பு வெளியானது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களிளேயே சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சூர்யா படத்தில் இருந்து விலகிவிட்டார். அதன் பிறகு இந்த படத்தை பாலாவே தயாரிக்கிறார். இந்த படத்தில் அருண்விஜய் நடிக்கிறார். முன்னதாக கீர்த்தி ஷட்டி இந்த படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார்.

அவர் விலகியதால், ரோஷினி பிரகாஷ் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படம் குறித்து வலைப்பேச்சு அந்தணன் சமீபத்திய பேட்டியில் பல தகவல்களை கூறியுள்ளார். முதலில் சூர்யாவை வைத்து படத்தை தொடங்கியபோது, கிட்டத்தட்ட 10 கோடி ரூயாய்க்கு மேல் செலவாகிவிட்டது.

ஆனால் அதை கூட சூர்யா திருப்பி கேட்கவில்லை. இயக்குநர் பாலா மீது இருக்கும் மரியாதையால், அப்படியே விட்டுவிட்டார். 10 நாட்களுக்கும் மேல் படப்பிடிப்பு நடந்தது. மிகவும் பொருமையாக ஒரு நாளைக்கு ஒரு காட்சி என்ற அளவில் தான் எடுத்தார் பாலா. இதனால் கடுப்பான சூர்யா படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார்.
அதன் பிறகு பாலாவே தயாரித்து எடுத்து வருகிறார். தன்னுடைய பணத்தை போட்டு எடுப்பதாலோ என்னவோ, மிகவும் வேகமாக, இதுவரை இந்த படத்தையுமே முடிக்காத அளவு வேகமாக பாலா இந்த படத்தை எடுத்து வருகிறார். இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.
