மாவீரன் வசூல்!..தயாரிப்பாளரே பினாமிதான்!. சம்பளத்தை ஏத்த சிவகார்த்திகேயன் போட்ட பிளான்?..

Published on: July 29, 2023
sk producer
---Advertisement---

சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், சரிதா, மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.  படம் வெளியாகி சில நாட்களிலேயே 75 கோடி ரூபாயை தாண்டி வசூலில் சாதனை படைத்துவிட்டது, மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என படத்தின் தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.

maaveeran

 

இதனை காலய்த்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டிருந்தார். இந்த பிரச்சனை குறித்து வலைப்பேச்சு அந்தணன், பல பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளர் அருண் விஷ்வாவே சிவகார்த்திகேயனின் பினாமி தான் என்று சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். எனவே இந்த படமே சிவகார்த்திகேயனுடையது தான்.

அதனால் இந்த படம் வசூலித்த உண்மையான தொகையை விட அதிகமான தொகையை கூறினால், அதையே காரணமாக கூறி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் அதிக சம்பளம் வாங்குவார். மேலும் விளம்பரத்திற்காக கூட இப்படி அதிகமாக சொல்வார்கள். உண்மையில் இந்த படம் 75 கோடி வசூலிக்கவில்லை என்ற உண்மை தெரிந்ததால், ப்ளூ சட்டை மாறன் இப்படி விமர்சித்துள்ளார்.

இதே போல தான் பல தயாரிப்பாளர்கள் விளம்பரத்திற்காக பல கோடி வசூலித்ததாக பொய்யாக அறிவிக்கின்றனர். இதனால் அடுத்தடுத்த படங்களில் ஹீரோக்கள் சம்பளத்தை உயர்த்துகின்றனர். இது போல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜெயிலர் ஆடியோ விழாவில் அரபிக்குத்து பாட்டு!.. என்னப்பா தெரிஞ்சிதான் செய்றீங்களா!..

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.