ஆடு, கோழி வளர்த்து பார்த்திருப்போம்! இதென்னப்பா? காட்டுல இருக்கிறத வீட்ல வச்சு வளர்க்கும் நடிகர்கள்

Published on: July 30, 2023
sivaji
---Advertisement---

சினிமாவையும் தாண்டி அனைவரும் விரும்புவது தங்களுடைய பொழுதுபோக்கிற்காக எதாவது ஒரு செல்லப்பிராணியை வளர்த்து அதன் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஒரு சில பேர் நாயுடன் கொஞ்சி விளையாடுவார்கள். இன்னும் ஒரு சில பேர் பூனையுடன் விளையாடுவார்கள், இன்னும் சில பேர் பறவைகளை வளர்த்து அதன் மூலம் நிம்மதியை உணர்வார்கள். இந்த லிஸ்ட்டில் பார்க்கப் போகும் நடிகர்கள் பெரிய பெரிய வன விலங்குகளை செல்லப்பிராணியாக வளர்த்தவர்கள். அவர்கள் யார் என்பதை பார்ப்போம்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் :  நாய்கள் வளர்க்கும் நடிகர்கள் மத்தியில் சிங்கத்தை வளர்த்த புரட்சித்தலைவர் தான் நம் எம்ஜிஆர். அடிமைப்பெண் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் எம்ஜிஆர் சிங்கத்துடன் சண்டையிடுவது  மாதிரியான காட்சி. அதற்காக தன் சொந்தச் செலவிலேயே ஒரு சிங்கத்தை வாங்கி சத்யா ஸ்டூடியோவில் அதற்காகவே ஒரு தனி கூண்டு அமைத்து பல நாள்கள் அதனுடன் பழகினாராம் எம்ஜிஆர். சூட்டிங் எல்லாம் முடிந்து அந்த சிங்கத்தை மிருககாட்சியிலேயே கொடுத்துவிட்டாராம். ராஜா என்ற பெயரை கொண்ட அந்த சிங்கம் இறந்ததும் அதற்கு ஒரு லட்சம் செலவில் தன் வீட்டிலேயே ஒரு சிலை வைத்தாராம் எம்ஜிஆர்.

mgr
mgr

மைக் டைசன் : ஒரு பாக்சர் மற்றும் டோலிவுட் நடிகர்தான் இந்த மைக் டைசன். பெங்கால் டைகரை வாங்கி வளர்த்து வந்திருக்கிறார். கிட்டத்தட்ட 500 பவுண்ட் எடை கொண்ட அந்த பெங்கால் டைகருக்காக ஒரு வருடத்தில் 3000 கோடி வரை செலவு செய்திருக்கிறாராம். இப்படியே செலவு செய்து செய்து ஒரு கட்டத்தில் வங்கியில் பணமே இல்லாமல் திவாலாகவும் ஆயிருக்கிறாராம் மைக் டைசன். ஒரு நாள் பக்கத்து வீட்டு காரர் இந்த டைகரை பார்க்கலாம் என வர அவரை இந்த டைகர் பிடித்து கடித்து விட்டதாம். அதனால் போலீஸ் கேஸ் ஆகி அபாரதமாக 2.50 லட்சம் டாலர் வரை கட்டினாராம்.இது தேவைதானா?

mike
mike

லியார்டானோ டி கேப்ரியோ : டைட்டானிக் படம் பார்த்த எல்லாருக்கும் தெரியும் இந்த நடிகரை. இவர் தான் ஜேக்கா நடித்த நம்ம ஹீரோ. இவர் என்ன வளர்க்கிறார் என்றால் ஒரு ஆஃபிரிக்கன் டார்டாய்ஸை வளர்த்துக் கொண்டிருக்கிறாராம். 400 டாலர் கொடுத்து வாங்கிய இந்த ஆமையை அவர் நடித்த இன்ஸெப்ஷன் படத்திற்காக வாங்கியிருக்கிறார். அந்தப் படம் முடிந்ததும் இந்த ஆமையை தன்னுடனேயே வைத்துக் கொண்டாராம். கிட்டத்தட்ட 100 வருடங்கள் வரை உயிர் வாழுமாம் இந்த ஆமை.

leo
leo

விஜய்சேதுபதி : பொதுவாகவே இவரை மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். நல்ல நல்ல விஷயங்களை செய்து கொண்டிருப்பவர். வீட்டில் வைத்து வளர்த்தால் தான் அந்த விலங்குகள் வளருமா என்ன? வண்டலூரில் இரண்டு புலிகளை தத்தெடுத்திருக்கிறாராம் விஜய்சேதுபதி. அதற்கான செலவுகளை வருடத்திற்கு 5 லட்சம் வரை கொடுத்து உதவுகிறாராம் மக்கள் செல்வன்.  ஒரு நாளைக்கு அந்த இரண்டு புலிகளுக்கும் 2000 வரை செலவாகிறதாம். ஆதித்யன் மற்றும் ஆர்த்தி என்பது தான் அந்த புலிகளின் பெயராம்.

sethu
sethu

சிவகார்த்திகேயன் : விஜய் சேதுபதி வரிசையில் சிவகார்த்திகேயனும் இணைந்திருக்கிறார். அதே வண்டலூரில் ஒரு சிங்கத்தையும் ஒரு யானையையும் தத்தெடுத்து வளர்க்கிறாராம். மேலும் அதற்கான பராமரிப்பு செலவுகள் அனைத்தையும் சிவகார்த்திகேயனே பார்த்து வருகிறாராம். நடித்து மக்களை குதூகலப்படுத்தும் நடிகர்கள் மத்தியிம் இப்படி ஒரு எண்ணம் தோன்றியது வரவேற்கத்தக்கது.

இதையும் படிங்க : நாகேஷுக்கெல்லாம் என்னால பாடமுடியாது! சொன்ன பாடகரை கே.பாலசந்தர் என்ன செய்தார் தெரியுமா?

ele
ele

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.