கிஸ்ஸிங் சீனில் கமலிடம் வசமாக சிக்கிக் கொண்ட மீனா! இதுவரை யாருக்கும் தெரியாத விஷயம்..

Published on: July 30, 2023
kamal
---Advertisement---

சினிமாவில் பொதுவாக கமலை பற்றி ஒரு பிம்பம் இருந்தே வந்தது. ஆரம்பகாலங்களில் கமலை ஒரு ப்ளேபாயாகத்தான் அனைவரும் பார்த்தனர். அவருடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தாலே பல நடிகைகள் பயப்படுவதுமுண்டு. ஏனெனில் கமல் படத்தில் நடித்தால் கண்டிப்பாக ஒரு லிப் டூ லிப் கிஸ்ஸிங் சீன் இருக்கும் என்ற ஒரு பிம்பம் இருந்தது. ஆனால் அதுதான் உண்மை.

ஹாலிவுட் படத்திற்கு பிறகு அந்த மாதிரி கிஸ்ஸிங் சீன் வெளிப்படையாக இருந்தது கமல் படத்தில்தான். அதனாலேயே பல நடிகைகள் தயங்கியிருக்கிறார்கள்.ஒரு சில நடிகைகள் நடிப்பு என்று வந்து விட்டால் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும் என ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

kamal1
kamal1

அந்த வகையில் கமலுடன் முதன் முதலாக மீனா அவ்வைசண்முகி என்ற படத்தில் ஜோடி சேர்ந்தார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான அந்தப் படம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு வெற்றிப் பெற்றது. படத்தில் நடிக்கும் போது கமலுக்கு இணையாக தானும் திறமையை காட்ட வேண்டும் என நினைத்தே மீனாவும் நடித்தாராம்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறிய மீனா இதுவரைக்கும் தெரியாத ஒரு விஷயத்தை பகிர்ந்தார். அதாவது கமல் படம் என்றதும் பெரிய லெஜெண்ட் என்றுதான் நியாபகத்திற்கு வந்தது என்றும் அந்த கிஸ் சீன் பற்றியெல்லாம் நியாபகம் இல்லை என்றும் அதனாலேயே நடிக்க ஒப்புக் கொண்டேன் என்றும் கூறினார்.

மேலும் ஒரு சீனில் இயக்குனர் என்னை படுக்க சொன்னார். அப்படியே கமல் வந்து கிஸ் கொடுப்பது போன்ற சீன் என்று சொன்னபிறகு தான் மீனாவுக்கே பல்பு அடிச்ச மாதிரி இருந்ததாம். அவ்ளோதான். இதை நாம் யோசிக்கவே இல்லை என்று நினைத்துக் கொண்டு மீனாவின் அம்மாவிடம் போய் பதறியிருக்கிறார். அப்பொழுதெல்லாம் மீனா எங்கு படப்பிடிப்புக்கு போனாலும் அவரின் அம்மாவும் கூடவே போவது வழக்கம்.

kamal2
kamal2

அதனால் மீனா அவரது அம்மாவிடம் ‘அம்மா அம்மா போய் இயக்குனரிடம் நீயே சொல்லு, நான் இப்படி பண்ண மாட்டேன், ’ என்று சொல்லி அழுதிருக்கிறார். அதற்குள் இயக்குனர் ஷார்ட் ரெடி என்று கத்த பதறி போய் நின்றாராம் மீனா. பின் இங்கே படுங்கள் என்று ரவிக்குமார் சொல்லியிருக்கிறார். மீனாவுக்கு ஒரே பதற்றமாம்.

அங்கு இருந்த கமல் வந்தாராம். பக்கத்தில் போய்  கிஸ் கொடுக்கிற மாதிரி நடிங்கள் என்று சொன்னதும் கமல் கிட்ட போய் நெருங்கி  ‘இந்த தடவை  வேண்டாமே’ என்று சொல்லுவது மாதிரி காட்சியாம். அவ்ளோதான். மீனா துள்ளிக் குதிச்சி எழுந்து விட்டாராம். ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் மீனாவே ரவிக்குமாரிடம் சொல்ல வேண்டும் என நினைத்தாராம். நல்ல வேளை கமலே சொல்லிட்டாரு என்று அந்த பேட்டியில் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.