விஜய் படத்துல நடிச்சது பெரிய தப்பு.. ஓடாதுன்னு அப்பவவே தெரியும்- ஆதங்கத்தை கொட்டிய தமன்னா..

Published on: July 31, 2023
vijay
---Advertisement---

காவாலா பாட்டு வெளியானதில் இருந்து ட்ரெண்டிங்கில் இருக்கிறார் நடிகை தமன்னா. இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் சுறா படத்தில் நடிக்கும் போதே, எனக்கு அந்த படம் ஓடாது என்பது தெரியும் என்று ஓப்பனாக தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் தமன்னா. இடையில் சில ஆண்டுகள் காணாமல் போயிருந்தார். தற்போது மீண்டும் விட்ட இடத்தை பிடித்துவிட்டார் என்றே கூறலாம்.

sura

ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தில் தமன்னா நடிக்கிறார். அடுத்து விடாமுயற்சி படத்திலும் அவர் தான் ஹீரோயின் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஓன்றில் சுறா படத்தில் நடித்துக்கொண்டிருந்த போதே அந்த படம் ஓடாது என்று எனக்கு தெரியும் என்று தமனன்னா வெளிப்படையாக கூறியுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு விஜய், தமன்னா, வடிவேலு நடிப்பில் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான சுறா திரைப்படம் சரியாக ஓடவில்லை.

மேலும் பலரும் அந்த படத்தை ட்ரோல் செய்தனர். பல ஆண்டுகள் கழித்து இது பற்றி தமன்னா தற்போது பேசியுள்ளார். அந்த படம் சரியாக வரவில்லை என்று என் உள்உணர்வு அப்போதே சொன்னது. சுறா படத்தில் நடிச்சது நான் செய்த தவறு. இந்த படம் கண்டிப்பா ஃபிளாப் என்று தெரிந்தாலும் கூட, வேறு வழியில்லாமல் நடித்துக்கொடுத்தேன்.

sura movie

ஒரு படத்தில் கமிட்டாகி விட்டால், அதனை முடித்து கொடுக்க வேண்டியது நடிகர்களின் கடமை. எனவே தான் நடித்தேன். மேலும் படத்தில் சில விஷயங்கள் சரியாக இல்லை என்றால், இப்போது நான் அதை பற்றி தைரியமாக சொல்வேன். ஆனால் அப்போது எதையும் சொல்லாமல், நடித்து கொடுத்துவிட்டு வந்துவிடுவேன். பல படங்களில் நடிக்கிறோம்.

பல படங்களை பார்க்கிறோம். எனவே சில விஷயங்களை பார்த்தால் தெரியும். இந்த படம் சரியாக வராது என்று. எல்லா நடிகர்களுக்குமே அந்த உள்உணர்வு இருக்கும். இனி அது போன்ற படங்களில் நடித்து உங்களை டார்சர் செய்ய மாட்டேன் என்று தமன்னா வெளிப்படையாகவே சுறா படத்தை பற்றி பேசியுள்ளார்.

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.