2 வயசில் இருந்தேவா? மேடையில் ரஜினிக்காக மாஸ் காட்டிய அனிருத் – ஓடி வந்து கட்டியணைத்த தலைவர்

Published on: July 31, 2023
rajini
---Advertisement---

ரஜினினாலே ஒரு மாஸ், எனர்ஜி, சுறுசுறுப்பு.இவைதான் நியாபகத்திற்கு வரும். வயது 70ஐ கடந்தாலும் இன்னும் அதே சுறுசுறுப்புடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரிடம் இருந்து வரும் இளம் தலைமுறையினர் நிறைய பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.

rajini1
rajini1

அதே முயற்சியில் தான் ரஜினியும் இருக்கிறார். மேடை ஏறினாலே சொற்பொழிகளை அள்ளி வீசுகிறார். அது இப்போதைக்கு இந்த இளம் தலைமுறையினருக்கு தேவையான ஒன்று. அதுவும் ரஜினி மாதிரியான ஆள்கள் சொல்லும் போது கண்டிப்பாக அது சேர வேண்டிய இடத்தில் போய் சேரும்.

அந்த அளவுக்கு ரஜினி மீது தீவிர அன்பு கொண்டு அலைகின்றனர் ரசிகர்கள். அந்த ஒரு ஆச்சரியத்தை சமீபத்தில் நடந்த ஜெய்லர் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது பார்க்க முடிந்தது. அவர் உள்ளே வரும் போது கூச்சலிட்டு கத்திய ரசிகர்களால் அரங்கமே தீப்பொறியாகியது.

 

rajini2
rajini2

ரசிகர்கள் மட்டுமில்லாமல் வந்திருந்த பிரபலங்களும் ரஜினியின் ரசிகர்களாகவே மாறினார்கள். அந்த வகையில் நம்ம இசை இளவரசர் அனிருத் ரஜினியை பற்றி பேசியது தான் ஹைலைட்டே. மேடையில் பேசிய அனிருத் ‘அண்ணாமலை படத்தை தன்னுடைய 2 வயசில் பார்த்தேன் என்றும் அப்பொழுது இருந்த மாஸ் இப்பொழுது வரைக்கும் தொடர்ந்து ரஜினிக்கு கொண்டே இருக்கிறது என்றும்’ கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : சில்க் ஸ்மிதாவையே மிஞ்சிய பத்மினி! இப்படியெல்லாம் நடிச்சிருந்தாங்களா? முகத்திரையை கிழித்த பிரபலம்

அதனால் ரஜினிக்காக தன் உயிரையே கொடுக்க தயார் என்றும் கூறி நெல்சனை பார்த்து நெல்சா இந்த தடவ மிஸ் ஆகாது என்றும் கூறினாராம். இதை கேட்டதும் அரங்கமே அதிர்ந்ததாம். மேலும் ரஜினி அரங்கத்திற்குள் வந்ததும் அனிருத்தை பார்த்ததும் பூரிப்பில் இறுக்கமாக கட்டியணைத்து தன் அன்பை பரிமாறிக் கொண்டார்.

rajini3
rajini3

மேலும் ரஜினி பேசும் போது மைக்கை வாங்கி நடிகை ரம்யா கிருஷ்ணன் ‘ நீலாம்பரி கேரக்டரால் இத்தனை வருடங்கள் எனக்கு பெருமையை தேடிக் கொடிக்கின்றன என்றும் ’ கூறினாராம். மேலும் அந்த நீலாம்பரி கேரக்டரால்தான் ராஜமாதாவாக மாறினேன் என்றும் சொல்லி அதோடு இல்லாமல் அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் தான் இந்த ஜெய்லர் திரைப்படத்திலும் அமைந்திருக்கிறது என்று சொல்லி முடித்திருக்கிறார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.