அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சமீரா ரெட்டி.. கோடி ரூபாய் கொடுத்தாலும் செய்ய மாட்டேன்.. துணிச்சலாக மறுத்த நடிகை!

Published on: August 1, 2023
sameera reddy
---Advertisement---

நடிகை சமீரா ரெட்டி, தமிழில் வாரணம் ஆயிரம், அசல், வேட்டை, வெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கு மற்றும் இந்தியிலும் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகிவிட்டார் சமீரா ரெட்டி. தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமீரா ரெட்டி குறித்து பல தகவல்களை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

sameera

நடிகை சமீரா ரெட்டி, மாடலிங் செய்து கொண்டும், ஒரு வாட்ச் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டும் இருந்த சமயத்தில், ஒரு வார இதழின் அட்டை படத்தில் இவரது புகைப்படத்தை பார்த்து அஜித் நடித்த சிட்டிசன் படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அந்த நேரத்தில் ஒரு இந்தி படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிவிட்டதால், சிட்டிசன் படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை.

இதற்காக மிகவும் வருந்திய சமீரா ரெட்டி, பிற்காலத்தில் அசல் படத்தில் அஜித் படம் என்று சொன்ன உடனே ஒத்துக்கொண்டார். தமிழில் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட வெகு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் திருமணம் செய்துகொண்ட பிறகு இனி நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துவிட்டார். பல பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் அக்கா, அண்ணி போன்ற கதாப்பாத்திரங்கள் வந்த போதும், நடிக்க மறுத்து வருகிறார்.

sameera

அதோடு தெலுங்கில் ஒரு படத்திற்கு ஐடம் சாங்கில் டான்ஸ் ஆடுவதற்கு 1 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க தயார் என்று கூறியும், எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும், ஐடம் சாங்கில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார். திருமணத்திற்கு பிறகு இவருக்கு அலோபீசியா எனும் அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நோய் வந்தால், தலையில் ஆங்ஆங்கே முடி உதிர்ந்து சொட்டை போல ஆகிவிடும். இவருக்கும் அதே போல 3 இடத்தில் ஆகிவிட்டதாம். இதனால் மனமுடைந்து இருந்துள்ளார். பல நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு அதிலிருந்து மீண்டு வந்துள்ளதாக அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இதே நோய் தான் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவிக்கு இருந்தது. இவ்வாறு செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- ரூ.1.5 கோடி வரை சம்பளம்!.. சின்னத்திரையில் கெத்துகாட்டும் ‘எதிர்நீச்சல்’ மாரிமுத்து

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.