மீனாவின் ஆசைக்கு எமனாக நின்ன விஷயம் – விஜயுடன் நடிக்காததற்கு அதுதான் காரணமா?

Published on: August 1, 2023
meenaa
---Advertisement---

கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளாக தன்னுடைய திரை வாழ்க்கையை பயணித்து வரும் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று ஒரு நட்சத்திர அந்தஸ்து பொறுப்பில் இருந்து வருகிறார். ரஜினியுடன் மீனாவின் அந்த காம்பினேஷன் தான் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. அதற்கு முன்பாக ஸ்ரீதேவி, ஸ்ரீ பிரியா, அம்பிகா, ராதிகா என பல நடிகைகள் நடித்திருந்தாலும் ரஜினிக்கு ஜோடி மீனாதான் என ரசிகர்கள் தங்கள் மனதில் நிலை நிறுத்திக் கொண்டனர்.

meena1
meena1

அதே அளவுக்கு ரஜினி மீது ஒரு ரசிகையாக மீனா எப்பொழுதும் அதிக அன்பும் பாசத்துடனுமே இருந்திருக்கிறார். ரஜினியை தவிர்த்து கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மீனா.

இதையும் படிங்க : விஜயகாந்துடன் நடிக்க மறுத்த கார்த்திக்!.. அவருக்கு பதில் நடித்த பிரபல ஹீரோ!..

தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் ,தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ள மீனா பாரதி கண்ணம்மா, திரிஷ்யம் ,அவ்வை சண்முகி, நாட்டாமை, எஜமான் போன்ற படங்களில் நடித்ததற்காக ஏகப்பட்ட விருதுகளை தட்டிச் சென்று இருக்கிறார்.

meena2
meena2

இந்த நிலையில் அனைத்து நடிகர்களுடனும் நடித்த மீனா விஜய்யுடன் மட்டுமே சேர்ந்து நடிக்கவில்லை. விஜய் நடித்த பிரியமுடன், ஃப்ரெண்ட்ஸ் போன்ற இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த நேரத்தில் ஏகப்பட்ட கால்ஷீட் பிசியால் நடிக்க முடிய வில்லை என கூறப்பட்டது.

ஆனால் அதற்கான காரணத்தை பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறினார். இப்பொழுது இருக்கிறதை விட அந்த காலத்தில் அதாவது 90களின் இறுதியில் மற்றும் 2000 ஆவது ஆண்டில் ஆண்டுகளில் விஜய் பார்ப்பதற்கு மிகவும் இளமையாக தோற்றத்துடன் இருந்தாராம். ஆனால் மீனா பார்ப்பதற்கு ஒரு வயசு அதிகமானதை போல இருந்தாராம். அதனால் இவர்கள் இருவரின் ஜோடியை ரசிகர்கள் ஏற்பார்களா என்ற சந்தேகம் பல பேருக்கு எழுந்திருக்கிறது. அதனால் கூட விஜயுடன் இணையும் வாய்ப்பு மீனாவிற்கு ஏற்படவில்லை என கூறினார். அதேசமயம் ரஜினியின் ரசிகையாக மீனா எந்த அளவுக்கு இருந்தாரோ அதே மாதிரி விஜயையும் மீனாவிற்கு மிகவும் பிடிக்குமாம்.

meenaa
meenaa

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.