திருமணத்திற்கு முன் ஆடிய ஆட்டம்!.. ஷாலினியால் ராமனாக மாறிய அஜித்.. உண்மையை கசியவிட்ட பிரபலம்!..

Published on: August 1, 2023
ajith
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு முதன்மை நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அஜித். ஒரு பிசியான நடிகராக இருந்தாலும் தன் குடும்பத்தையும் தன் பிள்ளைகளையும் நன்றாக கவனித்துக் கொள்ளும் ஒரு குடும்பத் தலைவனாக இருப்பதை பார்த்து அனைவரும் வியந்து போய் இருக்கின்றனர். இவ்வளவு பிசியான ஸ்செடுல்களுக்கு மத்தியில் எப்படி குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு வருகிறார் அஜித் என்ற கேள்வியை பல பேருக்கு எழுப்பி இருக்கிறது.

ajith1
ajith1

அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் அவருடைய மனைவியான நடிகை ஷாலினி. குடும்பத்தால் அஜித்தின் தொழிலுக்கு எந்த ஒரு தீங்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக தன் பிள்ளைகளையும் குடும்பத்தையும் அஜித்தின் அம்மாவையும் சேர்த்தே ஒட்டுமொத்தமாக குடும்ப பாரத்தை தன்னுள் சுமந்து காத்துக் கொண்டு வருகிறார் ஷாலினி.

அஜித் அமர்க்களம் படம் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஷாலினியுடன் காதல் ஏற்பட்டு அந்த படப்பிடிப்பு முடிந்த பிறகு இருவரும் முறையாக திருமணம் செய்து கொண்டு இன்றுவரை மற்றவர்களுக்கு ஒரு உதாரண தம்பதிகளாக திகழ்ந்து வருகின்றனர்.

ajith2
ajith2

ஷாலினியை கரம் பிடித்ததில் இருந்தே அஜித்தின் செயல்பாடுகளில் கொஞ்சம் மாற்றம் ஏற்படுவதாக அவரை அறிந்த நன்கு தெரிந்த வட்டாரங்கள் கூற பல செய்திகளில் நாம் கேட்டிருக்கிறோம். அதாவது முன் கோபக்காரராக அஜித் முன்பு இருந்ததாகவும் அந்த ஒரு மனநிலை இப்போது அஜித்திடம் இல்லவே இல்லை. அதற்கு காரணம் ஷாலினி தான் என்றும் பல பேர் சொல்கின்றனர்.

இதையும் படிங்க : உதவி இயக்குனருடன் டேட்டிங்!.. அடங்காத ஐஸ்வர்யாவை கண்டித்த ரஜினி.. பயில்வான் பகீர் தகவல்…

இதற்கிடையில் பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு அஜித்தை பற்றிய ஒரு சீக்ரெட்டை பகிர்ந்திருக்கிறார். ஷாலினியை திருமணம் செய்த பிறகு அஜித் ராமனாக மாறி இருக்கிறார் என்றும் திருமணத்திற்கு முன்பு உண்மையான காதல் மன்னனாகவே அஜித் வலம் வந்தார் என்றும் திடுக்கிடும் செய்தியை கூறியிருக்கிறார்.

ajith3
ajith3

அதாவது நடிகை ஹீராவுடன் அஜித்துக்கு காதல் ஏற்பட்டதாகவும் அவரை பெண் கேட்டு ஹீராவின் வீட்டிற்கு சென்றதாகவும் அவருக்காக ஈசிஆரில் ஒரு தனி பங்களா வாங்கி கொடுத்ததாகவும் செய்யாறு பாலு கூறினார். ஆனால் ஹீராவுக்கு வேறொரு நடிகருடன் தொடர்பு இருந்ததாம்.

அதை அறிந்தே அஜித் அவரை விட்டு விலகி வந்து விட்டார் என்றும் செய்யாறு பாலு கூறினார். இப்பொழுது அஜித் ஒரு நல்ல நிலைமைக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல நடிகராக இருக்கிறார் என்றால் அதற்கு முழு காரணம் ஷாலினி தான் என்றும் சொல்லப்படுகிறது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.