Connect with us
vijay

Cinema News

என்ன கதை வேணுனாலும் சொல்லிக்கோ! ‘லியோ’ ஆடியோ லாஞ்சில் விஜயிடம் எதிர்பார்ப்பது இதுதான்

தமிழ் சினிமாவில் ஒரு வசூல் சக்கரவர்த்தியாக வளர்ந்து நிற்பவர் விஜய். இப்போது அரசியலிலும் கால் பதிக்க வருகிறார். அதற்கான முன்னேற்பாடுகளை கவனித்துக் கொண்டும் வருகிறார். ஒட்டுமொத்த கவனமும் இப்போது விஜய் மீதுதான் திரும்பியிருக்கிறது.

காரணம் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தட்டிப் பறிக்க பார்க்கிறார் என்ற ஒரு விஷயம் தான். சரத்குமார் பத்த வச்ச நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது. வாரிசு பட மேடையில் விஜயை சூப்பர் ஸ்டார் என்று சொன்னதில் இருந்து காட்டுத் தீயாய் பரவிவருகிறது.

இந்த நிலையில் அதுவரைக்கும் சும்மா இருந்த ரஜினி விஜய்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன்னுடைய ஜெய்லர் படத்தின் பாடல் மூலம் தக்க பதிலடி கொடுத்தார். மேலும் அதே ஜெய்லர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் குட்டிக் கதை மூலமும் சரியான சவுக்கடியும் கொடுத்தார்.

இதையும் படிங்க : அஜித்தின் அடுத்த படம் ஓடிடியில்!.. படத்தின் பெயர் இதுதானாம்!.. என்னப்பா சொல்றீங்க!…

ஆனால் ரஜினியின் இந்த பேச்சுக்கு சில பேர் வருத்தமும் தெரிவித்திருந்தனர். ஒரு மூத்த நடிகர் இப்படி பேசியிருக்கக் கூடாது என்று. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் ஒரு பேட்டியில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் மக்கள் அவருக்கு அன்பாக கொடுத்தது என்றும் அத ஏன் தட்டி பறித்து பிச்சை எடுக்குற என்றும் கேட்டார்.

ஆனால் இது விஜயை சொல்லவில்லை என்றும் இதுவரைக்கும் நான் தான் விஜய் சூப்பர் ஸ்டார் என்று சொன்னதில்லை என்றும் ஆனால் சரத் சொன்னதுக்கு பதில் கூறியிருக்கலாம் என்றும் கூறினார். அத்தனை பேர் கூடியிருந்த மேடையில் சரத்குமார் சொன்னதுக்கு விஜய் ‘ நான் என்றுமே தளபதி தான்’ என்று சொல்லியிருந்தால் இந்தளவுக்கு பிரச்சினை வந்திருக்காது என்றும் கூறினார்.

இதையும் படிங்க : என்னால என் பசங்க வீட்ட விட்டு போய்ட்டாங்க – சாக்லேட் பாய் அப்பாஸுக்கு பின்னாடி இப்படி ஒரு சோகமா?

மேலும் ஜெய்லர் படத்தில் ரஜினியின் பேச்சுக்கு கண்டிப்பாக விஜய் பதில் கொடுக்க வேண்டும் என பல பத்திரிக்கையாளர்கள் கூறிவருகின்றனர். குறிப்பாக வலைப்பேச்சு அந்தனன் லியோ இசை வெளியீட்டு விழாவில் விஜய் கண்டிப்பாக இந்த சூப்பர் ஸ்டார் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கூறியிருந்தார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top