Cinema News
நான் முட்டாள்தனமா வேண்டாம்னு சொல்லிட்டேன்… இளையராஜா என்னை திட்டினாரு- புலம்பிய நாசர்
நடிகர் நாசர் கிட்டத்தட்ட 700 படங்களில் நடித்துள்ளர். தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் இவர் நடித்துள்ளார். தேவர்மகன், குருதிப்புனல், பம்பாய், மகளிர் மட்டும், ஜீன்ஸ், எம்டன் மகன் உள்ளிட்ட பல படங்களில் மிக சிறப்பாக நடித்திருப்பார்.
இந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும், அதை எதார்த்தமாக நடித்துவிடுவார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார் நாசர். இவரை ஒரு நடிகராக தான் இன்றைய தலைமுறையினருக்கு தெரியும். ஆனால் இவர் ஒரு இயக்குநரும் கூட. இவர் பாப்கார்ன், மாயன், தேவதை, அவதாரம் என 4 படங்களை இயக்கியுள்ளார்.
இதையும் படிங்க- எவனையும் தேடி நான் போகல!.. எல்லாரும் என்னை தேடி வந்தாங்க!.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இளையராஜா!…
இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், இவர் இயக்கிய அவதாரம் படத்தில் வரும் ‘தென்றல் வந்து தீண்டும் போது’ பாடல் குறித்து பல தகவல்களை தெரிவித்துள்ளார். இந்த படம் வெளியாகி 28 ஆண்டுகள் ஆகிவிட்டது.
ஆனாலும் இந்த பாடல் இன்று வரை சலிக்கவே இல்லை என்றே கூறலாம். அப்படிப்பட்ட இந்த பாடலை வேண்டாம் என்று நாசர் கூறிவிட்டாராம். இளையராஜா இந்த பாடலுக்கு மெட்டு போட்டுவிட்டு, நாசரிடம் கருத்து கேட்டுள்ளார். அவர் இதனை கேட்டுவிட்டு, வேண்டாம் என்று கூறிவிட்டேன்.
முட்டாள்தனமாக, சிறுபிள்ளை தனமாக அப்படி சொல்லிவிட்டேன். அதற்கு அவர், ‘யோவ் போயா, நீ போய்டு 4 மணிக்கு வா’ என்று கூறினார். நான் 4 மணிக்கு சென்று பார்த்தேன், வேறு மெட்டு மாற்றி கொடுப்பார் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் அதே மெட்டுக்கு பாட்டு போட்டிருந்தார்.
கேட்டவுடன் மிகவும் பிடித்துவிட்டது. எனக்கு இசையில் பெரிதாக ஞானம் கிடையாது. முதலில் அவர் ஒரு ஆர்மோனிய பெட்டியை வைத்துக்கொண்டு, பாடி காட்டியபோது, எனக்கு தெரியவில்லை. பிறகு அனைவரும் சேர்ந்து வாசித்த போது, தான் புரிந்தது. இளையராஜாவிடம் ஓடி சென்று மன்னிப்பு கேட்டேன் என்று நடிகர் நாசர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க- கங்கை அமரன் அடித்த கமெண்ட்!. கடுப்பான பாலச்சந்தர்!. இளையராஜாவின் பிரிவுக்கு முதல் பொறி!..