">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மீண்டும் விஜயிடம் சரணடைந்த முருகதாஸ் – கடுப்பான தளபதி ரசிகர்கள்
விஜயின் அடுத்த திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க நிறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்து விட்ட விஜய் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்பதே தமிழ் சினிமா வட்டாரத்திலும், விஜயின் ரசிகர்கள் வட்டாரத்திலும் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கிய சுதா கொங்கராதான் விஜயின் 65வது படத்தை இயக்கப்போகிறார் என செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அவர் இயக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், ஏ.ஆர்.முருகதாஸே விஜயின் அடுத்த படத்தின் இயக்குனர் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. தர்பார் திரைப்படத்தின் தோல்வியிலிருந்து மீள விஜயே சரியான வழி என ஏ.ஆர்.முருகதாஸ் கருதுவதாக தெரிகிறது.
மேலும், சர்கார் போல அரசியல் தூக்கலான கதை அம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் முருகதாஸே பெஸ்ட் என்பதால் அவரை விஜய் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், விஜயின் அடுத்த படத்தை அட்லி இயக்குவார் என எதிர்பார்த்த அவரின் ரசிகர்கள் இந்த செய்தியால் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.