Connect with us

Review

ஜெயிலர் விமர்சனம்: டார்க் காமெடி கொஞ்சம்.. கொலவெறி ஆக்‌ஷன் அதிகம்.. ஆனால் கதை?

பீஸ்ட் படம் பங்கமாக ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், ரஜினியை வைத்து ஜெட்டெல்லாம் ஓட்டவிடாமல், தரையிலேயே கத்தி, துப்பாக்கியுடன் ஒரு தரமான ஆக்‌ஷன் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் நெல்சன்.

தர்பார், அண்ணாத்த படங்களில் இயக்குநர்கள் ரஜினியை வைத்தே க்ரிஞ்ச் செய்தது போல நெல்சன் ஒரு இடத்தில் கூட ரஜினியின் கெத்துக்கு பங்கம் விளைவிக்காமல் திரைக்கதையை நகர்த்தி மாஸ் காட்சிகள், ஸ்டைல் ஷாட்கள், பஞ்ச் வசனங்கள் என பக்காவாக செட் எடுத்து ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

இதையும் படிங்க: ஜெயிலர் படம் வொர்ஸ்ட்!.. ஃபேக் ஐடியில் வன்மம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. இதெல்லாம் ஒரு பொழப்பா!…

ஜெயிலர் படத்தின் கதை:

ரிட்டயர்ட் வாழ்க்கையில் குடும்பத்தினரே மதிக்காமல் மோசமாக நடத்தப்படும் முத்துவேல் பாண்டியன் சிலை கடத்தல் கும்பலை பிடிக்க ஆர்வம் காட்டி வரும் தனது மகன் வசந்த் ரவியை கொன்று விட்டனர் என்பதை அறிந்ததும் வேட்டையாட டைகர் முத்துவேல் பாண்டியனாக மாறி சம்பவம் செய்கிறார்.

தனது ஆட்களை கொன்ற முத்துவேல் பாண்டியனையும் அவரது குடும்பத்தினரையும் கொல்ல வில்லன் விநாயகன் எடுக்கும் முயற்சிகளை பக்கத்து ஸ்டேட் டான்களான சிவராஜ்குமார் மற்றும் மோகன்லாலின் உதவியுடன் முறியடித்து விநாயத்தை கொல்லப் போகும் நிலையில், தனது மகன் உயிருடன் இருப்பது தெரிந்து சைலன்ட்டாகிறார்.

ரஜினியின் ருத்ர தாண்டவம்:

மகனை விடுவிக்க விநாயகன் சொல்லும் விலையுயர்ந்த பொருளை கடத்த பக்காவாக பிளான் போட்டு அந்த பொருளை கடத்திக் கொண்டு கொடுத்து விட்டு தனது மகனை காப்பாற்றும் ஜெயிலருக்கு கிளைமேக்ஸில் ஒரு சூப்பரான ட்விஸ்ட் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அதுவும் பல தமிழ் சினிமாவில் பார்த்து புளித்துப் போன ஒன்று தான் என்பதைத் தான் ஜெனரல் ஆடியன்ஸால் ஜீரணிக்க முடியவில்லை.

ஜெயிலர் படம் முழுக்கவே ரஜினியின் ருத்ர தாண்டவம் தான். சண்டைக் காட்சிகள், துப்பாக்கியால் சுடுவது, கத்தியால் வில்லன் ஆட்களை தலை துண்டாக வெட்டிக் கொல்வது என கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி நடித்து மிரட்டியிருக்கிறார். கிளைமேக்ஸ் காட்சியில் ரஜினிகாந்தை சுருட்டு பிடிப்பது போல நெல்சன் காட்டியிருக்க வேண்டாம், ரஜினிகாந்தும் அதை தவிர்த்து இருக்கலாம்.

உருவத்தில் தான் வில்லனாக விநாயகன் தெரிகிறாரே தவிர அவர் செய்யும் காட்சிகளும், அவரது ஆட்கள் பண்ணும் அலப்பறை தான் ரசிகர்களை கொஞ்சமாச்சும் சிரிக்க வைக்கிறது. இத்தனை பவர்ஃபுல்லான முத்துவேல் பாண்டியன் பற்றி அவரது மனைவி ரம்யா கிருஷ்ணனுக்குக் கூட தெரியாதா? என்பது தான் பில்லியன் டாலர் கேள்வி. பாட்ஷா படத்தில் கூட அவரது அம்மாவுக்கு அவரை பற்றி தெரியுமே? என்கிற கேள்வி எழுகிறது. தமன்னா, சுனில், ரெடின் கிங்ஸ்லி போர்ஷன் எல்லாம் படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக மாறியுள்ளது. அந்த ப்ரீ க்ளைமேக்ஸ் காட்சி மட்டுமே நெல்சனின் எழுத்தை பாராட்ட வைக்கிறது.

ஜெயிலர் – ஃபெயிலர் இல்லை!
ரேட்டிங்: 3.75/5.

author avatar
Saranya M
Continue Reading

More in Review

To Top