Connect with us
parasakthi

Cinema History

பராசக்தி முதல் நாள் முதல் காட்சி.. தியேட்டரில் நடந்த மேஜிக்!. இப்படியெல்லாம் கூட நடக்குமா?!…

சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து பல வருடங்கள் கழித்து சினிமாவில் நடிக்க துவங்கியவர் சிவாஜி கணேசன். அறிமுகமான முதல் படமான பராசக்தி படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ‘யார் இவர்?’ என திரையுலகையும், ரசிகர்களையும் ஆச்சர்யப்படுத்தியவர்.

அதன்பின் பல திரைப்படங்கள், பல கதாபாத்திரங்கள் என ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். நடிப்பு என்றால் சிவாஜி.. சிவாஜி என்றால் நடிப்பு என ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதபடி நடிப்பில் நவரசத்தையும் காட்டினார். ஏழை, பணக்காரன், கூலித் தொழிலாளி, மருத்துவர், வழக்கறிஞர், நீதிபதி, கடவுள் அவதாரங்கள், அப்பா, மகன் என இவர் போடாதே வேஷமே இல்லை.

parasakthi

அதனால்தான் இவருக்கு நடிகர் திலகம் என்கிற பட்டம் கிடைத்தது. 70 வயது வரை சினிமாவில் நடித்தவர் சிவாஜி. வயதான பின்னரும் முதல் மரியாதை, தேவர் மகன் போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இன்று வரை நடிப்புக்கு இலக்கணமாக சிவாஜி கணேசனே இருக்கிறார்.

இதையும் படிங்க: சிவாஜி தனக்கு செய்ததை பாக்கியராஜுக்கு செய்த எம்.ஜி.ஆர்!.. ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!…

நாடகங்களில் நடித்து வந்த சிவாஜி 1952ம் வருடம் வெளிவந்த பராசக்தி திரைப்படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தை கிருஷ்ணன் – பஞ்சு இயக்கியிருந்தனர். அந்த காலத்தில் அதிகமான பக்தி படங்களே வரும். ஆனால், பராசக்தியே நாத்திக கருத்துக்களை பேசிய படம். ஏனெனில், அப்படத்திற்கு கதை வசனம் எழுதியது கலைஞர் கருணாநிதி.

parasakthi

இப்படம் 1952ம் வருடம் அக்டோபர் 17ம் தேதி வெளியானது. முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்கள் பார்த்தபோது இப்படம் அவர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது. இப்படியும் படம் எடுக்க முடியுமா?.. இப்படியும் வசனங்கள் இருக்குமா? என ஆச்சர்யப்பட்டனராம். அதோடு, இடைவேளை வந்தால் எல்லோரும் எழுந்து வெளியே செல்வார்கள். ஆனால், பராசக்தி இடைவேளையின் போது ஐந்து நிமிடத்திற்கு யாரும் எழுந்து போகவே இல்லையாம். அப்படியே பிரம்மை பிடித்தது போல் எல்லோரும் அமர்ந்திருந்தார்களாம்.

இந்த தகவலை நடிகர் ஏ.ஆர்.சீனிவாசன் அவரின் யுடியூப் சேனலில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிவாஜி வீட்டில் ஒரு எம்.ஜி.ஆர்!.. அது யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!…

google news
Continue Reading

More in Cinema History

To Top