இனிமே கிட்ட வாங்கடா!.. ஜெட் வேகத்தில் ரஜினி!.. லோகேஷ் படத்துக்கு கால்ஷீட் ரெடி..

Published on: August 14, 2023
lokesh
---Advertisement---

நெல்சனின் இயக்கத்தில் ரஜினி நடித்து சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் அனைத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரிக்குவித்து வருகிறது. வெளிநாட்டிலும் இப்படம் 4 நாளில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டது. மொத்தமாக 4 நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூலை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

ரஜினிக்கு கடைசியாக வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, தான் யாரென நிரூபிக்க வேண்டிய நிலையில் ரஜினி இருந்தார். அதோடு, விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்ட்டார் என திரையுலகில் கொளுத்திப்போட ஜெயிலர் பட விழாவில் ரஜினி பருந்து – காக்கா கதையெல்லாம் சொல்ல வேண்டியிருந்தது.

இதையும் படிங்க: வெளியில் இருந்தே ஆட்டம் காட்டும் ரஜினி – சர்வதேச தலைவர்களையும் அசரவைத்த ‘ஜெய்லர்’..

ரஜினி ஆசைப்பட்டது போலவே ஜெயிலர் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட்டும் அடித்துள்ளது. ஜெயிலர் படம் வெளியாவதற்கு முதல்நாள் ரஜினி கிளம்பி இமயமலைக்கு சென்றுவிட்டார். தற்போது ரஜினி அங்குதான் இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வருகிறது.

ஜெயிலர் வெற்றி கொடுத்த உற்சாகத்தில் தனது அடுத்தடுத்த படங்களுக்கு வெளியாகி வருகிறார் ரஜினி. ஜெயிலர் படத்தில் நடிக்கும்போதே தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒருபக்கம், ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ளார்.

இதையும் படிங்க: கூரையை பிச்சுக்கிட்டு கொடுத்தாலும் இந்த ஆசை மட்டும் அடங்காது! விடாமல் லோகேஷை டார்ச்சர் செய்யும் விஜய்சேதுபதி

இந்த படத்திற்காக வெறும் 38 நாட்கள் மட்டுமே ரஜினி கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இமயமலையிலிருந்து திரும்பிய பின் ரஜினி இந்த படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். எனவே, அக்டோபர் மாதத்திற்கு முன்பே அப்படத்தில் ரஜினி முடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த படத்திற்கு பின் எல்லோரும் ஆவலுடன் எதிர்பாக்கும் அவரின் 171வது படமான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பார் மாதம் துவங்கவுள்ளதாம். மேலும், அதிகபட்சம் பிப்ரவரி மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிடும் எனத்தெரிகிறது. 2 வருடத்திற்கு அல்லது ஒரு படத்திற்கு ஒரு படம் என நடித்து வந்த ரஜினி தற்போது ஜெட் வேகத்தில் அடுத்தடுத்த படங்களுக்கு தயாராகி வருவது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: சம்பளம் அதிகமா வாங்கிட்டா நீங்க சூப்பர்ஸ்டாரா? அவர் இடத்துக்கு நீங்க வர முடியாது.. தளபதியை வறுத்தெடுத்த பிரபலம்

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.