ஜெயிலர் பாட்டுக்கு லெஜெண்ட் சரவணா போட்ட மெர்சல் டேன்ஸ்!. நீ செம மாஸ் தலைவா!…

Published on: August 15, 2023
---Advertisement---

தமிழகத்தின் பல இடங்களிலும் கிளைகளை வைத்திருக்கும் நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ். துணிக்கடை மட்டுமில்லாமல் பாத்திரக்கடை, நகை கடை வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் நிறுவனம் இது. சென்னை தி நகர் உள்ளிட்ட பல ஏரியாக்களிலும் இவர்களின் கிளை செயல்பட்டு வருகிறது.

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தை தற்போது நிர்வகித்து வருபவர் சரவணன். சில வருடங்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை விளம்பரங்களில் நடிக்க துவங்கினார். ஹன்சிகா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகள் அந்த விளம்பரங்களில் அவருடன் ஆட்டம் போட்டனர்.

இதனால் பிரபலமான சரவணனுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசையும் வந்தது. நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட பல நடிகைகளுக்கும் தூதுவிட்டார். ஆனால், இவருடன் ஜோடி போட்டு நடிக்க யாரும் முன்வரவில்லை. எனவே, மும்பையிலிருந்து கதாநாயகியை இறக்கினார். அப்படி உருவான திரைப்படம்தான் லெஜெண்ட். இந்த படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது.

குறிப்பாக எமோஷனல் காட்சியிலும், நடன காட்சியிலும் சரவணாவின் பர்பாமன்ஸை பலரும் கிண்டலடித்தனர். எனவே, இப்போது வரை தனது அடுத்த பட அறிவிப்பை அவர் இன்னமும் வெளியிடப்படவில்லை. ஆனால், இன்று சுதந்திரன தினவிழாவை குழந்தைகளுடன் கொண்டாடியுள்ள சரவணா ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு அவர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ பார்க்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்

https://twitter.com/Karthikravivarm/status/1691342548407906304

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.