Cinema News
சூப்பர் ஹிட் படங்களை எல்லாம் மிஸ் பண்ணிட்டு இப்போ புலம்பும் ஜெய்.. தட்டித் தூக்கிய ஜீவா, சிம்பு..
நடிகர் ஜெய் ராஜா ராணி, சுப்ரமணியபுரம், எங்கேயும் காதல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் சமூப காலமாக இவர் நடித்த பல படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். மேலும் தளபதி 68 படத்தில் விஜய்க்கு தம்பியாக நடிக்கவுள்ளார்.
ஏற்கனவே பல ஆண்டுகள் முன்பு பகவதி படத்தில் நடிகர் ஜெய் விஜய்க்கு தம்பியாக நடித்திருப்பார். இப்போது மீண்டும் விஜய்க்கு தம்பியாக நடிக்கவுள்ளார். நடிகர் ஜெய் சரியான படங்களை தேர்வு செய்து நடிக்காததால், தான் இப்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க- ஒரு வேளை டைட்டில்ல பிரச்சினையா இருக்குமோ! மறுபடியும் ‘வணங்கான்’ படத்தில் ஏற்பட்ட குளறுபடி
இந்நிலையில் நடிகர் ஜெய் தான் தவறவிட்ட படங்களை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவத்துள்ளார். சுப்ரமணியபுரம் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது, சிவா மனசுல சக்தி படத்தில் நடிக்க இயக்குநர் ராஜேஷ் என்னை மிகவும் கட்டாயப்படுத்தி அழைத்தார்.
ஆனால் அந்த சமயத்தில் தாடியை எடுக்க முடியாது என்பதால், என்னால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அதே போல, நாடோடிகள் படமும் நான் நடிக்கவேண்டியது தான். அதே போல சுப்ரமணியபுரம் படத்தை பார்த்துவிட்டு, விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடிக்க கவுதம் மேனன் கேட்டிருந்தார்.
அந்த சமயத்தில் நான் வேறு சில படங்களில் நடித்துக்கொண்டிருந்தேன். அதனால் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் நடிக்க முடியவில்லை. அதேபோல ராட்சசன் பட இயக்குநரும் நானும் ஒன்றாக 6 மாதம் பயணித்தோம். படம் குறித்து, கெட்டப் குறித்து நிறைய பேசினோம்.
ஆனால் தயாரிப்பாளர் மாறியதால், அந்த படமும் கைவிட்டு சென்றுவிட்டது என்று ஜெய் தெரிவித்துள்ளார். அவர் கூறிய படங்கள் எல்லாமே செம ஹிட்டான படங்கள். இதையெல்லாம் மிஸ் பண்ணிவிட்டு, தற்போது படவாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார் ஜெய்.
இதையும் படிங்க- வசூலை அள்ளும் ஜெயிலர்!.. முதல் ஆளாக நெல்சனுக்கு வலை விரித்த அந்த நடிகர்!…