Cinema News
அப்போ எல்லாம் 250 நாள்!.. இப்போ 50 நாளுக்கே ஆடுறாங்க!.. மாமன்னன் டீமை மானபங்கம் செய்த கீர்த்தி சுரேஷ்!..
மாமன்னன் படத்தில் கீர்த்தி சுரேஷின் போர்ஷனையே மாரி செல்வராஜ் டம்மியாக்கி விட்டார் என அவரது ரசிகர்கள் படத்தை பார்த்து விட்டு ஏகப்பட்ட விமர்சனங்களையும் புலம்பல்களையும் அடுக்கி இருந்தனர்.
இந்நிலையில், மாமன்னன் படத்தின் 50வது நாள் வெற்றி விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ் கிடைத்த கேப்பில் தனது பழி வாங்கும் படலத்தை நல்லா வச்சு செய்துள்ளார்.
இதையும் படிங்க: அப்பா வேலைய பாக்க போய் தன் படத்துக்கே ஆப்பு வைத்த ஜெயம் ரவி!. இதெல்லாம் தேவையா செல்லம்!..
50 நாள் கொண்டாட்டம்: அண்ணாமலை உள்ளிட்டவர்கள் மாமன்னன் படம் சாதியை தூண்டுகிறது என கடுமையாக விமர்சித்த நிலையில், உடனடியாக மாமன்னன் படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தை பிரம்மாண்டமாக நடத்தி விட்டார் உதயநிதி ஸ்டாலின்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, பகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அரசியல் ரீதியாகவும் சமூக வலைதளங்களிலும் அந்த படத்தின் ரிலீஸுக்கு முன்பும் பின்பும் பெரியளவில் விவாதங்கள் நடைபெற்றன.
வடிவேலு நடிப்பை பாராட்டிய கீர்த்தி சுரேஷ்:
என்னோட நடிப்பை இப்படியெல்லாம் ரசித்துப் பார்த்து பாராட்டுறீங்கனா அதுக்கான முழு அங்கீகாரமும் மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களைத் தான் சேரும். உதயநிதி ஸ்டாலின் இப்படியொரு வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி எனக்கூறிய கீர்த்தி சுரேஷ் வடிவேலு சார் அந்த மலையில் நின்று அழும் காட்சியை முதலில் பார்த்ததுமே நிச்சயம் தியேட்டரில் அனைவரும் அழுவார்கள் என நினைத்தேன். அதே போல நடந்தது. எனக்கு படத்திலேயே பிடித்த காட்சி அதுதான் என்றும் கீர்த்தி சுரேஷ் பேசினார்.
மேடையிலே வச்சு செய்த கீர்த்தி சுரேஷ்:
முன்பெல்லாம் 250 நாள், 175 நாள், 100 நாள் என வெற்றிவிழா கொண்டாடுவார்கள். ஆனால், இப்போ 50 நாளே பெருசா தெரியுது என அதிரடியாக பேசி அரங்கில் இருந்தவர்களை அப்படியே அமைதியாக்கி விட்டார் கீர்த்தி சுரேஷ்.
உடனடியாக உதயநிதி ஸ்டாலினின் மைண்ட் வாய்ஸை கேட்ச் பண்ண கீர்த்தி சுரேஷ் ‘மனசுலே இப்போ என்ன திட்டுறீங்கன்னு தெரியுது’ என சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து ஒவ்வொருத்தருக்கா நன்றி சொல்லிட்டு வந்து கடைசியில், ‘படத்தில் பேசாமலே இருந்த ரவீணாவுக்கும் நன்றி’ என மாரி செல்வராஜுக்கு இன்னொரு குட்டு வைத்து விட்டார்.
இதையும் படிங்க: தலைவர் 170 படத்தை கிடப்பில் போட்ட லைக்கா!.. ஜெயிலர் பேய் ஹிட் அடிச்சும் வீணாப் போச்சே!..