சொந்த மகன்களுக்கே கிடைக்காத ஒரு கௌரவத்தை ரஜினிக்கு கொடுத்த சிவாஜி! பதறி போய் திகைத்த சூப்பர் ஸ்டார்

Published on: August 20, 2023
rajini
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு போற்றத்தக்க நடிகராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தன்னுடைய சிங்கக் குரலால் வசனங்களை கர்ஜித்து அனைவரையும் மிரமிப்பில் ஆழ்த்தியவர். அழகிய உரை நடை தமிழால் தமிழுக்கே பெருமை சேர்த்தவர் சிவாஜி கணேசன்.

சினிமா உலகில் ஒரு பெருமை மிகு நடிகராக திகழ்ந்து வந்த சிவாஜி 2001 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார். படையப்பா படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது சிவாஜி ரஜினியை அழைத்து அப்பா இறந்து விட்டால் முதல் ஆளாக வந்து நிற்பியா என கேட்டாராம். அதை கேட்டதும் ரஜினி ஷாக் ஆகிவிட்டாராம்.

இதையும் படிங்க : சும்மா கிடங்கப்பா! வரலாற்றில் முத்திரை பதிச்சாச்சு – ‘லியோ’ படத்தால் விஜய் செய்த சாதனை

ஆனாலும் சிவாஜி அதை விட்டப்பாடில்லை. உடனே ரஜினி கண்டிப்பாக வந்து நிற்பேன் என்று சொல்லியிருக்கிறார். அவர் சொன்னமாதிரி சிவாஜி மறைந்த செய்தியை  கேட்டு ரஜினி நேராக அப்போல்லா மருத்துவமனைக்கு சென்றதிலிருந்து அடக்கம் செய்யும் வரை கூடவே ஒரு மூத்தமகனாக செயல்பட்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் பிரபு வெளி நாட்டில் படப்பிடிப்பில் இருந்ததனால் அவர் வரும் வரை எல்லா வேலைகளையும் ரஜினியே பார்த்துக் கொண்டு இருந்தாராம். இது ஒரு நிகழ்வாக இருந்தாலும் கமலா தியேட்டர் அதிபர் ஒரு புதிய ரெஷ்டாரண்டை திறக்க சரியாக சிவாஜி திருமண நாளில் ஏற்பாடு செய்திருந்திருக்கிறார்.

கமலா தியேட்டர் அதிபரும் சிவாஜியும் நண்பர்களாம். மே 1 ஆம் தேதி திறப்பு விழாவிற்கு கண்டிப்பாக மனைவியுடனும்தான் வரவேண்டும் என சிவாஜிக்கு அன்பு கட்டளை விடுத்திருக்கிறார் தியேட்டர் அதிபர். அதே நேரம் பக்கத்தில் ரஜினி , கௌதமி நடிப்பில் ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததாம்.

உடனே ரஜினியையும் கௌதமியையும் வரவழைத்திருக்கிறார் தியேட்டர் அதிபர். எல்லாம் வந்து சேர இரு மாலைகளை சிவாஜி மற்றும் அவரது மனைவி கமலாம்பாளிடம் கொடுத்து மாலை மாற்றச் சொல்லியிருக்கிறார் தியேட்டர் அதிபர். கூடவே திருமாங்கல்யத்தையும் ரஜினியிடம் கொடுத்து சிவாஜியிடம் கொடுத்து கட்ட சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க : நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த கவின்!.. வைரலாகும் திருமண புகைப்படம்!…

இதை கேட்டதும் ரஜினி ஷாக் ஆகிவிட்டாராம். வயதில் நான் சிறியவன், அவர் எனக்கு அப்பா மாதிரி. நான் எப்படி இதை செய்யமுடியும் என கேட்டிருக்கிறார். உடனே சிவாஜி நீயும் எனக்கு ஒரு மகன் தான். மூத்தமகனாக இருந்து தாலியை எடுத்துக் கொடு என்று சொல்லியிருக்கிறார். இதை கேட்டதும் ரஜினி கண்கலங்கிவிட்டாராம். இந்த சுவாரஸ்ய செய்தியை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.