ரசிகர்கள் ஒரு பக்கம் சண்டையிட்டு கொண்டாலும் அதற்கு முக்கிய காரணமாக இருப்பதே அந்தந்த ஹீரோக்கள் தான். அவர்களும் அந்த சண்டைக்கு சரியான வகையில் எண்ணெய் ஊற்றி கொழுத்தி விட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் லியோவிற்கும்-ஜெய்லருக்கும் தற்போது கோலிவுட்டில் சண்டை நடந்து கொண்டு இருக்கிறது. இந்த போட்டியில் தன்னை மறந்துட்டாங்களே என கமலுக்கும் கவலை வந்து இருக்கும் போல ட்ரெண்ட்டில் தன்னையும் வைத்து கொள்ள அவர் பல வருடங்களாகவே ஒரு வழக்கத்தினை ஃபாலோ செய்து வருகிறார்.
இதையும் படிங்க: மகள் திருமணத்தை நடத்த முடியாமல் தவித்த கண்ணதாசன்!.. கடவுள் மாதிரி வந்த பாட்டு!..
கைதி படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து லோகேஷை அழைத்து இருவரும் படம் செய்யலாம் எனக் கேட்டாராம். லோகேஷும், கமலின் பக்தராகவும் அளவுக்கு அவரின் தீவிர ரசிகர் என்பதால் உடனே ஓகே சொல்லிவிட்டார். அதை தொடர்ந்தே விக்ரம் படம் திரைக்கு வந்தது.
படமும் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் பாசிட்டிவ் விமர்சனங்களையே பெற்றது. அந்த வகையில் கமலின் அடுத்த ஸ்கெட்ச் என்னவோ நெல்சனுக்கு தான் என கோலிவுட் வட்டாரத்தில் ஒரு தகவல் பரவி வந்தது. அந்த டவுட்டினை தற்போது நெல்சனே ஒரு பேட்டியில் உடைத்து இருக்கிறார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை கண்டபடி திட்டிய கண்ணதாசன்.. பதிலுக்கு எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா?…
கமல் நெல்சனை சந்தித்த போது நாம் ஒரு படம் செய்யலாம் எனக் கூறி இருக்கிறார். அதற்கு நெல்சன் கண்டிப்பாக அதற்கு சரியான கண்டெண்ட் வரும்போது செய்யலாம் எனக் கூறி விட்டதாக தெரிவித்து இருக்கிறார். இது பலருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். படப்பிடிப்பு காட்சிகள் 6 மணி நேரங்களை கடந்த நிலையில் இரண்டு பாடகமாகவே வெளியிட படக்குழு முடிவு செய்து இருக்கிறது. இந்த படத்தினை முடித்து விட்டு புதிய இயக்குனர்களை வைத்தே தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை வெளியிடலாம் என்றே கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.





