Connect with us

Cinema News

வடிவேலு யார் வாய்ப்பையும் தட்டி பறிக்கல… தொடர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்…

தமிழ் சினிமாவின் சின்ன கலைஞர்கள் எல்லாமே சமீபத்திய காலமாக பேட்டி கொடுக்கும் போது தங்களுடைய வாய்ப்பினை தட்டி பறித்தது வடிவேலு தான். அவரால் தான் எங்களுக்கு வாய்ப்புகள் பறிபோனதாக தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார்கள். இதுகுறித்து இந்திரலோகத்தில் நா அழகப்பன் தயாரிப்பாளர் மாணிக்கம் விநாயகம் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.

மேலும் வடிவேலு செட்டில் எப்படி இருப்பார் என்பது குறித்து அவர் சொல்லி இருக்கும் தகவல்கள் ஆச்சரியமானதாக இருக்கிறது. அந்த பேட்டியில் பேசிய மாணிக்கம் விநாயகம், வடிவேலு மற்றவர் வாய்ப்பு தட்டி பறித்து விட்டார் என ஓபனாக சொல்லி விட முடியாது. அவர் என்னுடைய செட்டில் அப்படி இல்லை. அவருக்கு தேவையானவர்களை போட சொல்லுவார். நானும் சரி எனச் சொல்லி விடுவேன். இது திரையுலகத்தில் நடப்பது தான். ஹீரோக்கள் தங்களுக்கு பிடித்தவர்களை புக் செய்வது வழக்கமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது வடிவேலுவிடம் மட்டும் இருக்கும் குணம் இல்லை.

இதையும் படிங்க: மலேசியாவா?..சென்னையா?.. ஆடியோ லான்ச் எங்கே?.. விஜய் ஃபேன்ஸை குழப்பியடிக்கும் லியோ டீம்!…

மேலும், அவருக்கும் தம்பி ராமையாவுக்கும் பிரச்னை இருந்தது கூட உண்மை தான். ஆனால் இது பூதாகரம் ஆகும் அளவுக்கெல்லாம் இல்லை. அவர்கள் அப்பா-மகன் போன்ற சண்டை தான். அவர்கள் சண்டையை பெரிதாக எடுத்துகொள்ளாமல் விட்டாலே சரியாகிவிடும். இல்லையென்றால் படத்திற்கு தான் பிரச்னையாக வந்து நிற்கும் என்றார்.

இதையும் படிங்க: சும்மா கிடங்கப்பா! வரலாற்றில் முத்திரை பதிச்சாச்சு – ‘லியோ’ படத்தால் விஜய் செய்த சாதனை

இதைப்போன்று சின்ன பிரச்னையால் நிறைய படங்கள் கைவிடப்பட்ட நிலையெல்லாம் உருவாகி இருக்கிறது. அதெல்லாம் பைத்தியக்காரத்தனம் எனக் கூறி இருக்கிறார். சின்ன கலைஞர்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால் என்னிடம் அவர் அப்படி இல்லை. அதனால் அதில் என்னிடம் நடக்காத விஷயத்துக்காக அவரை என்னால் குறை கூறிவிட முடியாது எனக் குறிப்பிட்டு இருந்தார்.

Continue Reading

More in Cinema News

To Top