தளபதி 68ல் நெல்சன் பட நடிகை!.. பக்கா ஸ்கெட்ச் போட்ட வெங்கட்பிரபு… ஜோதிகான்னு சொன்னதெல்லாம் சும்மாவா?!.

Published on: August 21, 2023
nelson
---Advertisement---

விஜய் லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவுடன் இணைந்து தனது அடுத்தப் படத்திற்கான வேலையில் பிஸியாக இறங்க இருக்கிறார். இப்போது லியோ படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கையில் படம் ரிலீஸ் ஆன பிறகு தளபதி 68 படத்திற்கான அப்டேட்டுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் செப்டம்பர் இறுதி வாரத்தில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று சொல்லப்படுகிறது. லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பது அனைவர் மத்தியிலும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் படிங்க : எப்பவும் போல உளறி விஜயிடம் மாட்டிக் கொண்ட வெங்கட்பிரபு!.. தளபதி 68 முடியறதுக்குள்ள என்னென்ன நடக்குமோ!…

விஜயும் த்ரிஷாவும் இணைந்து நடித்த படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து  மீண்டும் இந்த ஜோடி இணைவது இந்தப் படத்திற்கு கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி 68 படத்திலயும் விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. விஜய் த்ரிஷா ஜோடியை போன்று இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு வருகிறது என்ற பேச்சு வந்தது.

ஆனால் திடீரென விஜய்க்கு ஜோடியாக நெல்சன் பட நடிகை பிரியங்கா மோகன் நடிக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அப்போ ஜோதிகா என்றெல்லாம் சொன்னார்களே என்று ரசிகர்கள் கேட்க,

இதையும் படிங்க : சம்பளம் இது போதும்!. ஆனா அத கொடுத்துடுங்க!. கலாநிதி மாறனிடம் டீல் பேசிய ரஜினி!. தலைவர் செம விவரம்!…

விஜய் இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதால் ஒரு கதாபாத்திரத்திற்கு ஜோதிகாவும் இன்னொரு கதாபாத்திரத்திற்கு பிரியங்கா மோகனும் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாள்களில் அதை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.