Cinema History
வெறும் காபி.. 100 ரூபாயை மட்டும் கொடுத்து 7 பாட்டை வாங்கிய இயக்குனர்… பிரசாந்த் படத்தின் சுவாரஸ்ய பின்னணி!
தமிழ் சினிமாவில் ஒரு பாடத்துக்கு பாடல் இயற்ற வேண்டும் என்றால் பெரிய பெரிய ஹோட்டல்களில் புக் செய்து பலநாள் தங்கி டியூன் போட்டு பாடலை தயாரித்து வருகின்றனர். ஆனால் 90களில் தேவா தன்னுடைய வைகாசி பொறந்தாச்சு படத்துக்கு ஒரு டீ வாங்கி மட்டுமே கொடுத்ததாக தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் நட்சத்திர இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் தான் தேவா. இவர் தன்னுடைய படங்களில் மெல்லிசையை கூட ஹை டெம்போவில் வைத்து ரசிகர்களை அப்போதே செம வைப் செய்ய வைத்தவர். அவர் தன்னுடைய ஆரம்பகாலங்கள் குறித்து சித்ரா லட்சுமணனுடன் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.
அந்த பேட்டியில், ஒரு நாள் நாங்கள் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது இயக்குனர் பிரபாகரை பார்த்தோம். அவரிடம் வாய்ப்பு கேட்கும் போது சந்திரபோஸை பிக்ஸ் செய்திருக்கேன். தற்போது ரீரெக்கார்ட்டிங் வேலைகள் தான் நடக்க இருக்கிறது. புதிய இசையமைப்பாளருக்கு அவர் இசையமைக்கவில்லை என்றால் சங்கடமாக போய் விடும் என்றார்.
இதையும் படிங்க- நயனை கெஞ்ச வச்ச பாவம்… லைகாவிடம் கெஞ்சுகிறாரா அஜித்… விடாமுயற்சி சர்ச்சை!
அருகில் நின்று கொண்டிருந்த நம்ம ஊரு பூவாத்தா இயக்குனர் மணிவாசகம் ஒரு 100 ரூபாய் ஆட்டோவிற்கு செலவு செய்யுங்கள். என்ன தான் அவர் மியூசிக்கில் இருக்கிறது என்பதை பாருங்கள் என்றார். பிரபாகரும் அதற்கு ஓகே சொல்லிவிட்டார். அவர் சொன்ன நாளுக்கு நாங்களும் சென்று விட்டோம். நாங்கள் டீ குடித்து விட்டு செல்லலாம் என பக்கத்து டீக்கடையில் நின்று அந்த நேரத்தில் ஒரு குழு வெளியேறியது. செக்கிங் தான செய்கிறோம் என்ற தொணியில் நாங்களும் போய் இறங்குகிறோம்.
குடிக்க காபி கொடுத்தார்கள். எங்கள் குழு, மணி வாசகம், அன்பாலயா பிரபாகர், அலுவலக பணியாளர்கள் இருந்தனர். நான் மியூசிக் போட்டவுடன் என்னுடைய நண்பர் காளிதாசன் சோடிக்கிளி தான் சோடிக்கிளி தான் சுத்துது சுத்துது டி என எழுதி விட்டார். பின்னாடி இருந்த மணி வாசகம் என்ன சோடிக்கிளி, சின்னப்பொண்ணு தான் வெட்கப்படுதுனு போடுங்க எனக் கூறுகிறார். அங்கு உருவாகியது தான் அந்த பாடல். இதை தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களிலேயே 7 பாடல்களை முடித்து விட்டோம்.
இதையும் படிங்க- அஜித்தின் மாஸ் படத்தை மிஸ் செய்த தளபதி… நானா? நீயா? போட்டி தொடங்கியது இப்படிதானா?
உடனே எங்களுக்கு அன்பாலயா பிரபாகர் சார் அட்வான்ஸ் கொடுத்து ஓகே செய்து விட்டார். அதன்பின்னர், சாப்பாடு கொடுத்தனர். 5000 கொடுத்தார். அதை தொடர்ந்து இரண்டு படங்களுக்கும் நீங்கள் தான் இசையமைப்பாளர் என புக் செய்தார் என்றார். அடுத்த நாளே படத்தின் டிசைன் பார்க்கும் போது என்னுடைய பெயர் தேவா எனப் போட்டனர். முதலில் நான் சி.தேவா என்று தான் போடுவேன். ராமராஜன் தான் வெறும் தேவா எனப் போடுங்கள் என என் பெயரையே மாற்றியதாக குறிப்பிட்டு இருக்கிறார்.