விடாமுயற்சி அவ்ளோ தான் போல!.. தலைவர் 170 பட பூஜைக்கே தேதி குறித்த லைகா.. செம ஸ்பீடில் சூப்பர்ஸ்டார்!..

Published on: August 22, 2023
---Advertisement---

பொன்னியின் செல்வன் படங்களைத் தொடர்ந்து சந்திரமுகி 2 படத்தையும் முடித்து ரிலீசுக்கு ரெடியாகி விட்ட லைகா நிறுவனம் அடுத்து எப்படியாவது அஜித்தின் விடாமுயற்சி படத்தை ஆரம்பித்து விடலாம் என காத்திருந்தது.

ஆனால், கடைசி வரை அஜித் தனது சொந்த வேலைகளிலேயே ஈடுபட்டு வருவதாகவும், படப்பிடிப்பை விரைவில் தொடங்க எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதை அறிந்து லைகா நிறுவனம் கடும் அதிருப்தியில் அந்த படத்தையே கைவிடும் முடிவுக்கு வந்து விட்டதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: இந்த பாட்டு நல்லா இல்லை… ஒதுக்கிய அஜித்… ஆனா, டபுள் ஓகே சொன்ன ரஜினிகாந்த்!

விடாமுயற்சி டிராப்பா?

அஜித்தையும் விடாமுயற்சியும் நம்பி இனி பிரயோஜனமில்லை. சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு 500 கோடி வசூலை வாரிக் கொடுத்த 72 வயது குதிரை ரஜினிகாந்தை வைத்து அதிரடியாக தலைவர் 170 படத்தை ஆரம்பித்து கல்லா கட்டி விடலாம் என கணக்குப் போட்ட லைகா நிறுவனம் வரும் ஆகஸ்ட் 26ம் தேதியே தலைவர் 170 படத்தின் பூஜையை போட்டு விடலாம் என திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் உள்ள சொகுசு ஹோட்டலான லீலா பேலஸில் பிரம்மாண்டமாக தலைவர் 170 படத்தின் பூஜை வரும் ஆகஸ்ட் 26ம் தேதி நடைபெற உள்ளதாக கூறுகின்றனர். ரஜினிகாந்தின் வருகைக்காகவே லைகா நிறுவனம் காத்திருந்த நிலையில், அவர் வந்தவுடனே படத்தின் வேலைகளை ஆரம்பித்து விட்டதாம்.

இதையும் படிங்க: தவறாக வழிநடத்தப்படுகிறாரா அஜித்? அடுத்தடுத்து கேள்விக்குறியாகும் இயக்குநர்களின் வாழ்க்கை..

தலைவர் 170 பூஜை, ஷூட்டிங் எப்போ?

சூர்யாவின் ஜெய்பீம் படத்தை இயக்கி கோல்டன் குளோப், ஆஸ்கர் கதவுகளை தட்டிய இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள இந்த படத்தில் அவருடன் இணைந்து அமிதாப் பச்சன் நடிக்கப் போவதாகவும், ஹீரோயினாக அஜித்தின் துணிவு படத்தில் நடித்த மஞ்சு வாரியர் நடிகக்ப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், ரஜினிக்கு அப்போசிட்டாக வில்லன் கதாபாத்திரத்தில் மாமன்னன் படத்தில் ரத்னவேலுவாக கலக்கிய பகத் ஃபாசில் வில்லனாக நடிக்கப் போவதாகவும், சர்வானந்த் முக்கிய ரோலில் நடிக்கப் போவதாகவும் ஏகப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், அடுத்த மாதம் செப்டம்பர் 19ம் தேதி படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்து, வெறும் 60 நாட்களில் படப்பிடிப்பையே முடிக்க பக்காவாக திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் என்கின்றனர்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் என்கவுன்ட்டர் கொலைகளுக்கு எதிரான போலீஸாராக நடிக்கப் போவதாகவும், இதுவும் நிஜ போலீஸ் கதையை தழுவிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.