Cinema History
தேவாவிற்கு பெண்ணை அனுப்பினாரா சத்யராஜ்?… அடேயம்மா! இப்படியா உண்மைய சொல்லுவீங்க!
சினிமா வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான தகவல்கள் இசையமைப்பாளர் தேவா சித்ரா லட்சுமணனுடன் தொடர்ச்சியாக பகிர்ந்து வருகிறார். அதில் நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கிறது. இதில் சில பிரபலங்கள் இப்படி கூட சேட்டை செய்வார்களா என நினைக்கும் அளவுக்கு கூட தகவல்கள் இடம் பெற்றுள்ளது.
அந்த பேட்டியில் தேவா பேசியது, மணிவண்ணன் மிகச் சிறந்த மனிதர். புது மனிதர் படத்தினை அவர் தான் இயக்கி இருந்தார். பாட்டுக்கான சூழ்நிலையை சரியாக சொல்லுவார். அதை ஃபாலோ செய்தாலே சரியாக பாடல்கள் கிடைத்து விடும். அவரின் படங்களுக்கு பாடல் உருவாக்குவதே சுலபமான வேலை தான்.
இதையும் படிங்க: சும்மா இருக்காம சூடு வச்சிக்கிட்ட ரஜினி… ஆப்பு செம பெரிசா இருக்கும் போலயே!
அவர் வெளியூர் சூட்டிங்கிற்கு சென்றால் எங்களையும் திடீரென கிளம்பி வாருங்கள் எனக் கூறி விடுவார். நாங்களும் என்னுடைய குழுவை அழைத்துக் கொண்டு கிளம்புவோம். என்ன சார் எனப் போய் கேட்டால் சும்மா தான் அழைத்தேன். வாங்க பேசிட்டு இருக்கலாம். கதை இன்னும் ரெடியாகல என்பார்.
சில்வர் பீச்சில் பேசிக்கொண்டு இருக்கும் போது தோன்ற பாட்டையெல்லாம் கேசட்டில் பதிஞ்சு வச்சிக்கோங்க. பின்னாடி யூஸ் ஆகும் என நக்கலாக கூறுவர். இந்த சமயங்களில் அவருடன் நடிகர் சத்யராஜூம் இருப்பார். ஏற்காடுக்கு அவர்களுடன் சென்று இருக்கிறேன்.
இதையும் படிங்க: மறுபடியும் அதே கேரக்டர் தானா?.. ஜெயிலர் ஃபார்முலாவை பின்பற்றும் ரஜினி.. தலைவர் 170 படத்தின் கதை இதுதான்..
நடுவில் சில்மிஷங்கள் எல்லாம் செய்வார்கள். ரூமில் தனியாக இருக்கும் போது பெண்ணிடம் காபியை கொடுத்து அனுப்பி விட்டு ஜன்னலில் இருந்து எட்டி பார்ப்பார்கள். அத்தனை காமெடியாக இருக்கும் அங்கு வேலை செய்ய அப்படி நிறைவாக இருக்கும்.
நான் இவர்களின் சில்மிஷங்களை தெரிந்து கொண்டு தான் அப்படி யாரும் வரும் போது படாரென வெளியில் வந்து விடுவேன். அதை பார்த்து தப்பிச்சிட்டீங்க சார் என்பார்கள் என நகைச்சுவையாக தெரிவித்து இருக்கிறார். எப்போதுமே மணிவண்ணனுடன் வேலை செய்யும் போது 75 சதவீதம் அரட்டை இருக்கும் 25 சதவீதம் தான் வேலை செய்வோம் எனவும் குறிப்பிட்டார்.