சிட்டி 3.0 ஆக மாறிய கார்த்தி! கமெண்ட் கொடுக்கிறது யாருனு தெரியுமா? எதுக்கு இந்த வேண்டாத வேலை?

Published on: August 24, 2023
karthi
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய அந்தஸ்தில் இருக்கும் நடிகர் கார்த்தி. ஒரு பக்கம் தன் அப்பா ஒரு சிறந்த நடிகர், ஒரு பக்கம் தமிழ் சினிமாவையே திரும்ப பார்க்க வைத்த தன் அண்ணன் சூர்யா, ஒரு பக்கம் ஜோதிகா என முழுவதும் சினிமா பின்னனியில் இருந்து வந்து அவரும் இன்று ரசிகர்களிடையே ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது ஜப்பான் என்ற படத்தில் நடித்த கையோடு இயக்குனர் நளன் குமாரசாமி இயக்கத்தில் மற்றுமொரு படத்திலும் இணைந்திருக்கிறார். கைவசம் ஏராளமான படங்களை வைத்திருக்கும் கார்த்தியின் சமீபகால பழக்கங்களில் கொஞ்சம் வேற்றுமை தெரிந்ததாக கோடம்பாக்கத்தில் கூறி வந்தனர்.

இதையும் படிங்க : உலகநாயகனு சொல்லிட்டு உள்ளூர் நாயகன் சம்பளத்தை கூட கொடுக்கலடா – ‘இந்தியன்2’வில் பரிதாப நிலையில் கமல்

அதற்கான காரணமும் இப்போது வெளியாகியிருக்கிறது. அதாவது கார்த்தியின் நடை , உடை , பாவனைகளில் முன்பு இல்லாத அளவுக்கு சற்று வித்தியாசம் இருப்பதாக தெரிகிறதாம். விசாரித்ததில் கார்த்தி தனக்கென ஒரு டீமை வைத்திருக்கிறார்.

அவர்கள் வெளியில் உள்ளதை ஆலோசித்து எப்படி நடக்க வேண்டும், எப்படி பேச வேண்டும், எப்படி உடை அணிய வேண்டும் என்பதை பற்றி ஆலோசனைகளை வழங்குகிறார்களாம். அவர்கள் சம்மதத்திற்கு பிறகே கார்த்தி அந்த ஆடைகளை அணியவும், பேசவும் தொடங்குவாராம்.

இதையும் படிங்க : இனிமே சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு இடமே இல்ல – போட்டியை டிராவில் முடித்த ரஜினி!

இதை தெரிந்த ஒரு சில பேர் எப்படி இருக்கனும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர் அப்பாவிடம் கேட்டாலே சொல்வாரே. சினிமாவில் சிவக்குமார் மாதிரி ஒரு மனிதரை பார்க்க முடியுமா? அப்படி பட்ட வயிற்றில் இருந்த வந்த கார்த்தி ஏன் வேண்டாத வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என புலம்பி வருகின்றனர்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.