Cinema History
தெரியாத தொழில தொட்டான் கெட்டான்… முடியவே முடியாது சொன்ன தேவா.. அடம் பிடித்த தனுஷ்!
தமிழ் சினிமாவின் தேனிசை தென்றல் என்ற அடைமொழி கொண்டவர் தேவா. இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளம் என 400க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இப்படங்களை குறித்தும் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்தும் சித்ரா லட்சுமணனுடன் அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் வைரலாகி வருகிறது.
அந்தபேட்டியில் இருந்து, முதலில் காதல் கோட்டை படத்தில் கவலைப்படாதே சகோதரா பாடலுக்கு என்னை தான் நடிக்க கூப்பிட்டார்கள். ஆயிரம் போனாவது சிவசக்தி பாண்டியன் சாரிடம் இருந்து வந்தது. அய்யயோ சார் எனக்கு அதெல்லாம் தெரியாது. பாட்டு பாட சொன்னீங்கனா பார்த்துக்கிட்டே பாடிடுவேன். இதெல்லாம் முடியாது எனக் கூறிவிட்டேன்.
இதையும் படிங்க : எல்லா ஏரியாலையும் ஐயா கில்லி… பழைய பார்முக்கு திரும்பிய ரஜினி… பாட்ஷா இரண்டாம் பாகமா?
டான்ஸெல்லாம் என்னை ஆட சொன்னா அது பார்க்கவே நல்லா இருக்காது. பல படங்களில் நடிக்க இன்னமும் கூப்பிடுகிறார்கள். சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளிவந்த எல்.கே.ஜி படத்துக்கு அவரின் அப்பா வேடம் என்னிடம் வந்தது. கதையை எழுதும் போதே உங்களை தான் மனதில் வைத்து இருந்தோம் என்று கூட கூறினர். கஷ்டம் என சொல்லி விட்டுட்டேன்.
தனுஷ் சமீபத்தில் போன் செய்தார். ஒரு சூப்பரான கதையின் வில்லனாக நடிக்க என்னை கூப்பிட்டார். வடசென்னையின் வில்லன் என்பதால் என்னை போல வடசென்னை பாஷை பேசும் ஆள் இல்லை என்பதால் உங்களை கூப்பிடுகிறேன் என்றார். நான் அதற்கு என்னை அழைத்ததற்கு நன்றிப்பா.
இதையும் படிங்க : நான் ப்ராங்கா சொல்லிடுறேன்… ஒரு ஹீரோவும் இத செய்யவே மாட்டாங்க… நானும் போனு விட்டுட்டேன்! ஃபீலான தேவா!
இதற்கு முன்னர் அடிதடி, ஓடி விளையாடு படங்களில் பாடல்களுக்கு சில காட்சிகளில் நடித்தேன். அதுவும் பாடல் சம்மந்தப்பட்டதால் தான் ஒப்புக்கொண்டேன். சாதுவாக இருப்பவர்கள் வில்லனாக நல்லா இருப்பார் என்பதால் தனுஷுக்கு தோன்றி இருக்கலாம். ஆனா தெரிந்த தொழில விட்டவனும் கெட்டான். தெரியாத தொழில தொட்டவுவனும் கெட்டான்’ எனக் குறிப்பிட்டார்.