Cinema News
அப்பா பகை குட்டி உறவா? அஜித்தால் கடுப்பில் விஜய்… என்ன நடந்தது?
விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராகி இருக்கும் தகவலால் இணையத்தில் பல சுவாரஸ்ய தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டே இருக்கிறது. தற்போது இந்த விஷயத்தில் அஜித்தின் பங்கு இருப்பது மிகப்பெரிய ஆச்சரிய விஷயமாக மாறி இருக்கிறது.
லண்டன், அமெரிக்காவில் சினிமா சார்ந்த படிப்புகளை தொடர்ச்சியாக படித்து விட்ட சஞ்சய் குறும்படம் கூட எடுத்திருக்கிறார். அதிலும் அவர் சொன்ன கதையில் லைகா ரொம்பவே திருப்தி அடைந்து இருக்கிறார்கள். இதனையடுத்தே சஞ்சய் புதிய இயக்குனராக கோலிவுட்டில் அடியெடுத்து வைத்து இருக்கிறார்.
இதையும் படிங்க : ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் இவரா? மியூசிக் இந்த வாரிசா? ஏலேய் இருங்கல தல சுத்துது!
இந்த படத்தின் நடிகர்கள் முதல் டெக்னீஷியன்கள் வரை அனைவரும் புதுமுகங்களாக இருப்பார்கள் என்றே தகவல்கள் தெரிவிக்கிறது. அதிலும் மியூசிக் மற்றும் நடிகர்கள் யாராக இருப்பார்கள் என்ற ஆவலே ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது.
இந்த படத்தின் அறிவிப்பு வந்த போது விஜய் லண்டனில் இருந்து இருக்கிறார். அருகில் அவர் இல்லை. ஆனால் இந்த படத்தின் செய்தியாளர்கள் ரிலீசை வெளியிட்டது என்னவோ அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தானாம். அஜித்தும் விஜயும் எதிருபுதிருமாக தான் இன்று வரை கோலிவுட்டில் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : உலக நாயகனுக்கே உரிய தனி அங்கீகாரம்! இன்று வரை யாராலும் தொட முடியாத சாதனையை நிகழ்த்திக் காட்டிய கமல்
கிட்டத்தட்ட இருவரின் ரசிகர்களும் பகையாளி சண்டை போல தொடர்ச்சியாக அடித்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் விஜய் இல்லாத இந்த சமயத்தில் அஜித் தரப்பில் இருந்து அவருக்கு ஆதரவாக இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கிறது. அப்பாவுடன் தொழில் போட்டி இருந்தால் கூட சஞ்சயை தன்னுடைய மகனாகவே அஜித் இந்த உதவியை செய்தார் என்றும் கூறுகிறார்கள்.
மேலும் எந்த விதத்திலும் தன்னுடைய நிழலில் ஜேசன் இருக்க கூடாது என்பதே விஜயின் ஆசையாக இருக்கிறது. இதனாலே அவரே நேரடியாக அஜித்தின் மேனேஜரை ஜேசனுக்காக கேட்டதாக கூட ஒரு தகவல்கள் இணையத்தில் வலம் வருகிறது.