Cinema History
வடிவேலு சரியான ஆளுங்க… குத்தமா சொல்லல… சும்மா சொல்லணும்னு தோணிச்சு… பகீர் கிளப்பிய பயில்வான்
தற்போது எல்லாம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக பேசினால் தான் பிரபலம் ஆவோம் என்ற ரீதியில் பலரும் பேசும் வார்த்தைக்கே பல சர்ச்சையை கிளப்பி விடுகின்றனர். இதில் சில நடிகைகள், விமர்சகர்கள் தான் இருந்து வந்தனர். சில காலமாகவே பயில்வான் ரங்கநாதன் அந்த கூட்டத்தில் இணைந்து இருக்கிறார்.
நடிகராக தமிழ் சினிமாவில் நடித்தார் என்ற அனுபவத்தினை வைத்துக்கொண்டு ஒவ்வொரு நடிகர், நடிகைகளை குறித்து அவர் கிளப்பிவிடும் அவதூறு அதிகப்படியான பிரச்னையை தான் கொண்டு வருகிறது. இந்த பிரச்னைக்கு முடிவே இல்லை என்ற ரீதியில் அவர் பேசும் வார்த்தைகள் தினமும் ஏகத்துக்கும் அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க : விஜயகாந்தோடு நடிக்க மாட்டேன்!. கறாரா சொன்ன ரஜினி!.. கேப்டன் கொடுத்த பதிலடி…
இந்தநிலையில், நடிகர் வடிவேலு குறித்து அவர் சொல்லி இருக்கும் சமீபத்திய தகவல்களும் அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கிறது. அந்த வீடியோவில், மதுரையில் ப்ரேம் போடும் கடையில் வேலை செய்து வந்தவர் நடிகர் வடிவேலு. திமுகவின் முக்கிய அமைச்சரின் கடையில் படுத்து தூங்கி வந்தார். சோற்றுக்கே வழி இல்லாமல் இருந்தார். அவரின் நண்பர் மூலம் ராஜ்கிரணின் அறிமுகம் கிடைத்தது.
ஆனால் அவருக்கு நேரடியாக வாய்ப்பு கொடுக்காமல், பனகல் பார்க்கில் இருந்த ராஜ்கிரண் அலுவலகத்தில் எடுப்பிடியாக வேலைக்கு சேர்த்தார். சின்ன சின்ன வேலைகளை அலுவலகத்திலே தங்கி செய்தார். அதை தொடர்ந்தே அவரின் படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். அவரின் அடுத்த படமாக தேவர் மகனில் மிகப்பெரிய புகழை பெற்றார்.
இதையும் படிங்க : இந்த நடிகர மட்டும் வச்சு நான் டைரக்ட் பண்ண மாட்டேன்! ஷாக் தகவலை கூறிய தளபதி வாரிசு
நீண்ட இடைவேளைக்கு பின்னர் காமெடி நடிகராக இருந்த வடிவேலு சொந்த குரலில் பாடவும் செய்தார். அவர் பெரிய நடிகராக இருந்த போது அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகையை அவர் தான் தேர்வு செய்ய வேண்டுமாம். அதிலும் ஒரு நடிகைக்கு இரண்டு பட வாய்ப்பு மட்டுமே தருவார். புதுபுது நடிகைகளுடன் ஜோடி போட விரும்புவார். சந்திரமுகி படத்தில் கூட அவருக்கு ஜோடியாக பி வாசு சொன்ன நடிகை வேறு.
ஆனால் வடிவேலு தான் சொர்ணாவை போடுங்கள் என வம்பு செய்தாராம். அவர் தற்போது தன் தம்பிக்கு ஏன் உதவியே செய்யவில்லை. 55 வயதில் சிறுநீரக அறுவை சிகிச்சை அவருக்கு செய்ய வடிவேலுவிடம் காசில்லாமலா போய் விட்டது. அவர் பரிந்துரைத்து இருந்தால் கூட அரசு மூலமாகவே அவருக்கு சிகிச்சை நடந்து இருக்கலாம். குறை சொல்லல.. சொல்லணுமுனு தோணிச்சு சொல்றேன் என்றார்.