Cinema History
வாலியின் பாடல் வரிகளை பாட முடியாமல் அழுத எஸ்.ஜானகி – அட அந்த பாட்டா?!..
கவிஞர் வாலியை பொறுத்தவரை நவரசங்களையும் பாடலில் வைப்பார், காதல், சமூகம், தத்துவம், ஏக்கம், சோகம், காமம், குத்து பாட்டு என எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சரி அதை அழகாக பாடல் வரிகளில் கொண்டு வந்துவிடுவார். அதனால்தான் அவர் வாலிப கவிஞர் என எல்லோராலும் அழைக்கப்பட்டார்.
காரைக்குடி நாராயணின் கதையில் உருவாகி 1978ம் வருடம் வெளியான திரைப்படம் அச்சாணி. இந்த படத்தில் முத்துராமன், லட்சுமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தனர். வாலி பாடல்களை எழுதியிருந்தார்.
இதையும் படிங்க: நான் எழுதின பாட்ட கண்ணதாசன்னு நினைச்சார் எம்.ஜி.ஆர்!. வாலி சொன்ன சீக்ரெட்!..
இந்த படத்தில் ‘மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்’ என்கிற பாடலை வாலி எழுதியிருந்தார். இந்த பாடலை ஜானகி பாடியிருந்தார். அருமையான டியூன், அருமையான பாடல்வரிகள் அமைந்ததால் ராஜா தன் பங்குங்கு இசைமூலம் இப்பாடலுக்கு உயிர் ஊட்டியிருந்தார். யேசுவை பெறாமல் பெற்றதாயாக மேரி மாதா இருந்தது போல இந்த படத்தின் கதாநாயகிக்கு காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அந்த சூழலில் இந்த பாடல் இடம் பெறும்.
இந்த பாடல் உருவான போது பல தடங்கல்கள் உருவானது. பிரசாத் ஸ்டுடியோ பிஸியாக இருந்ததால் ராஜாவால் காலையில் இந்த பாடலை ஒலிப்பதிவு செய்யமுடியவில்லை. எனவே, வேறு ஒரு ஸ்டுடியோவுக்கு சென்றனர். அங்கு சில எந்திரங்கள் வேலை செய்யவில்லை. எனவே, மதியம் 2 மணிக்கு மீண்டும் பிரசாத் ஸ்டுடியோ சென்று பாடலை ஒலிப்பதிவு செய்ய முயன்றனர்.
இதையும் படிங்க: எம்ஜிஆர் காலத்திற்கு பிறகு அஜித் படத்துல தான் அத வச்சேன்! வாலி சொன்ன சீக்ரெட்
மியூசிக் கண்டக்டர் என ஒருவர் இருப்பார். அவர் கை அசைத்தால்தான் இசைக்கலைஞர்கள் இசையை வாசிக்க துவங்குவார்கள். ஆனால், இசையில் மயங்கி கை காட்டவே இல்லை. என்னாச்சி என ராஜா கேட்டபோது ‘டியூனில் என்னை மறந்துவிட்டேன்’ என சொன்னாராம். அதன்பின் எல்லாம் சரியாக பாடலை பாடிக்கொண்டிருந்த ஜானகி ‘பிள்ளை பெறாத பெண்மை
தாயானது.. அன்னை இல்லாத மகனை தாலாட்டுது’ என்கிற வரிபோது பாடாமல் நிறுத்திவிட்டாராம்.
எல்லோரும் ஜானகியை பார்த்தபோது அவர் தொடர்ந்து பாடமுடியாமல் அழுது கொண்டிருந்தாராம். என்னாச்சி என ராஜா கேட்க ‘இந்த இசையும், வரிகளும் என்னை ஏதோ செய்கிறது’ என அவர் சொல்ல, அவரை ஆசுவாசப்படுத்தி சிறிது நேரம் கழித்தே அந்த பாடலை ஒலிப்பதிவு செய்து முடித்துள்ளனர்.
இந்த பாடலை கேட்டுவிட்டு இதே மாதிரி பாடல் எனக்கு வேண்டும் என இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் ராஜாவிடம் கேட்டு அடம்பிடித்துள்ளார். அப்படி உருவான பாடல்தான் ‘மணி ஓசை கேட்டு எழுந்து’ என்கிற பாடல். பயணங்கள் முடிவதில்லை படத்தில் இடம் பெற்ற இந்த பாடலையும் ஜானகியே பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சந்தேகப்பட்டு கவிஞர் வாலி வைத்த டெஸ்ட்!… அசால்ட் பண்ணி டேக் ஆப் ஆன இசைஞானி!..