Cinema News
திக்கு தெரியாம அலைஞ்சப்போ ரஜினி காட்டிய வழி! ‘காதல் ஓவியம்’ கண்ணன் கொடுத்த ஷாக்
தமிழ் சினிமாவில் காலத்தால் என்றும் அழியாத படமாக ஒரு சில படங்கள் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். அந்த வகையில் இன்றளவும் ரசிகர்களை கவர்ந்த படமாக காதல் ஓவியம் படத்தை சொல்லலாம். தோல்வியை தழுவிய படமாக இருந்தாலும் அந்தப் படத்தில் காதலின் ஆழத்தை மிக உருக்கமாக காட்டியிருப்பார் பாரதிராஜா.
1982 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் புதுமுக நடிகர் கண்ணன் என்ற சுனில் அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக ராதா நடித்திருந்தார். கூடவே கவுண்டமணி, ராதாரவி, ஜனகராஜ் போன்ற முக்கிய பிரபலங்களும் நடித்து வெளியான படமாக காதல் ஓவியம் படம் அமைந்தது.
இதையும் படிங்க: சித்தார்த் அபிமன்யுவுக்கும் பரவை முனியம்மாவுக்கும் என்ன சம்பந்தம்?!.. மோகன் ராஜா சொன்ன நம்ப முடியாத விஷயம்!..
படத்திற்கு இளையராஜாவின் இசை கூடுதல் பலமாக இருந்தது. இந்த நிலையில் அந்தப் படத்தின் ஹீரோவான கண்ணன் சமீபத்தில் அந்தப் படத்தை பற்றியும் அதன் பிறகு ஏன் சினிமாவில் தன்னால் நடிக்க முடியவில்லை என்பதை பற்றியும் கூறியிருக்கிறார்.
காதல் ஓவியம் திரைப்படத்திற்கு பிறகு கோடம்பாக்கத்தையே அலசினாராம் கண்ணன். ஆனால் எந்தவொரு கதாபாத்திரமும் சரியாக அமையவில்லை என்பதால் படிப்பில் கவனம் செலுத்தலாம் என அமெரிக்கா சென்று விட்டாராம்.
இதையும் படிங்க: என்ன பார்த்தா அந்த மாதிரியா தெரியுது!.. விஜய்க்கு ஜோடியாக நடிக்க முடியாதுன்னு ஜோதிகா சொல்ல இதுதான் காரணமா!..
முதுகலை படிப்பிற்காக அமெரிக்கா சென்ற கண்ணன் தன் படிப்பு செலவுக்காக அங்கு போய் தெருக்களை சுத்தம் பண்ணுகிற வேலையில் இருந்திருக்கிறார். அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து தான் மேற்படிப்பை தொடர்ந்திருக்கிறார்.
மேலும் வாய்ப்புக்காக பல ஸ்டூடியோக்களில் ஏறி இறங்கிய கண்ணன் ஏதோ ஒரு ஸ்டூடியோவில் உள்ளே நுழைந்தவர் மீண்டும் வெளியே வர வழி தெரியாமல் திகைத்து போயிருக்கிறார். அப்போது நீண்ட தொலைவில் ஒரு உருவம் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்த கண்ணன் அவரிடம் வழி கேட்கலாம் என்று சென்றாராம்.
இதையும் படிங்க: அரவிந்த்சாமி அப்பாக்கு ரஜினி கொடுத்த மரியாதை! வாயடைத்து நின்ற ‘மெட்டிஒலி’ சிதம்பரம்
அவர் அருகில் போய் பார்த்த பிறகு தான் தெரிந்ததாம் அவர் ரஜினி என்று. இவரை பார்த்ததும் ரஜினியும் ‘ஓ கண்ணன்.. வாங்க. உங்க படத்தை பார்த்தேன். அற்புதமாக நடித்திருக்கிறீர்கள்’ என கூறினாராம். அதன் பிறகு அவரிடம் வெளியே எப்படி போவது என கேட்டு திரும்பி வந்தாராம் கண்ணன்.
‘என்னை இந்தளவுக்கு நியாபகம் வைத்து இப்படி சொல்வார் என்று எதிர்பார்க்க வில்லை. இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்’ என கண்ணன் நெகிழ்ச்சி பட கூறினார்.