ஐஸ்கிரீமை காட்டி குழந்தையை ஏமாத்துற மாதிரிதான்! இத வாங்கிக் கொடுத்து ஜோதிகாவை ஆடவைத்த கலா

Published on: September 7, 2023
jothika
---Advertisement---

Actress Jyothika: தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. தனது முதல் எண்ட்ரியை ஹிந்தி படத்தின் மூலம் பதித்தவர் வாலி படத்தில் முதன் முதலாக தமிழில் அறிமுகமானார். வாலி படத்தில் ஒரு துணை நடிகை போல் வந்து போவார். இருந்தாலும் அவரின் தாக்கம் அந்தப் படம் முழுக்க நிறைந்திருக்கும்.

அந்தளவுக்கு தனது பெர்ஃபார்மன்ஸால் மனதில் நிலைத்து நின்றிருப்பார். ஜோதிகாவுக்கு பலமே அவரின் துரு துரு பேச்சும் முக பாவனையும் தான். எக்ஸ்பிரசன் குயின் என்றே சொல்லலாம். அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ஜோதிகாவை மறக்க முடியாத அளவுக்கு செய்திருப்பார்.

இதையும் படிங்க: ஓஹோ புகழில் அப்பா… பக்காவாக ப்ளான் போட்ட அக்கா… நான் மட்டும் என்ன தொக்கா? சௌந்தர்யா ஸ்கெட்ச்!

அந்த வகையில் ஜோதிகாவின் நடிப்பை வெளிப்படுத்திய படங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது ரஜினியின் சந்திரமுகி படம்தான். அந்தப் படத்தில் சந்திரமுகியாக ஒரு பேயாகவே  மாறி அனைவரையும்  மிரட்டியிருப்பார். ஆரம்பத்தில் ஜோதிகாவா இந்த கதாபாத்திரத்தை செய்ய போகிறார் என்ற பயம் இருந்தது.

ஆனால் அதை ஒரு சவாலாக ஏற்று அனைவருடைய பாராட்டையும் பெற்றார். குறிப்பாக ரா ரா பாடலுக்கு அவர் ஆடிய நடனம் காலங்காலமும் நிலைத்து நிற்கும். எந்த நடிகையும் நடிக்க தயங்கிய படம். ஆனால் ஜோதிகா ஏற்று நடித்தது மிகவும் பாராட்டுக்குரியது.

இதையும் படிங்க: அதான பழக்கதோஷம் போகுமா? ஜவான் இந்த தமிழ் படத்தின் காப்பி தானா? திருந்தாத அட்லீ!

அந்தப் பாடலுக்கு நடனம் ஆடும் போது கூட நடிகர் வினித்தும் ஆடுவார். முதலில் வினித்தை பார்த்ததும் ஜோதிகா பயந்தாராம். அதன் பின் கலா மாஸ்டர் ‘அவர் ஒரு க்ளாஸிக் டான்சர். அவரை பார்த்து நீ பயப்படக் கூடாது. உன்னால் எது முடியுமோ அதை செய்’ என்று சொன்னாராம்.

இருந்தாலும் இவ்ளோ க்ளாஸிக் வேண்டாம் மாஸ்டர் என்று ஜோதிகா சொல்லியும் ‘ நீ மட்டும் நல்லா ஆடி முடித்தால் உனக்கு ஒரு சூப்பர் சேலை ஒன்று வாங்கித் தருகிறேன்’ என்று சொல்லியே ஆட வைத்தாராம் கலா மாஸ்டர். அதன் பின் படமும் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்ற நிலையில் கலா மாஸ்டருக்கு ஜோதிகா ஒரு வைர வளையல் வாங்கிக் கொடுத்து கௌரவப்படுத்தினாராம்.

இதையும் படிங்க: நீ போ நான் இப்போ வர முடியாது… கறாராக தளபதி68 டீமை கழட்டிவிட்ட தளபதி…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.