இந்த லுக்கு வேறலெவல்!. விஜய் சேதுபதி 50வது பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!.

Published on: September 10, 2023
vijay sethu
---Advertisement---

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருபவர் விஜய் சேதுபதி. துவக்கத்தில் வாய்ப்பு கிடைக்காமல் தனுஷ் நடித்த புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களிலும் கும்பலில் ஒருவராக நடித்தவர். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய முதல் படமான பீட்சா படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

அதன்பின் நடுவுல கொஞ்சம் பக்கத்த கணோம், பண்ணையாரும் பத்மினியும், சூது கவ்வும் உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் ஹீரோவாக நடிக்க துவங்கினார். அதேநேரம் மற்ற ஹீரோக்கள் போல் கதாநாயகி, ஒப்பனிங் பாடல், குத்து பாடல், டூயட் பாடல், 4 சண்டை, வில்லன் என நடிக்காமல் கதையின் நாயகனாகவே நடித்தார்.

இதையும் படிங்க: ஷூட்டிங் கிளம்பி ராங் ரூட்டில் போய் டிராபிக்கில் சிக்கிய ரஜினி!.. அப்புறம் நடந்துதான் ஹைலைட்!…

ஒருபக்கம் விக்ரம் வேதா போன்ற படங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி அசால்ட் செய்தார். ஒருகட்டத்தில் வில்லனாகவும் நடிக்க துவங்கினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே தொடர்ந்து வில்லன் வேடம் அவரை தேடி வந்தது.

கமல் நடித்த விக்ரம் படத்திலும் வில்லனாக அசத்தியிருந்தார். அதேபோல், அட்லி பாலிவுட் சென்று இயக்கியுள்ள ஜவான் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். மேலும், தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அடுத்து ராம்சரண் நடிக்கவுள்ள புதிய படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளார்.

மொத்தத்தில் ஒரு பேன் இண்டியா நடிகராகவே மாறிவிட்டார். இப்போது வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை 2 உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் சேதுபதி தனது 50வது படத்தை நெருங்கிவிட்டார். இந்த படத்திற்கு மகாராஜா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சேரனோட சரக்கு போட்டு செம டேன்ஸு!.. இவ்வளவு ஓப்பனாவா சொல்லுவாரு மிஷ்கின்!…

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கவுள்ளார். முடி வெட்டிகொள்ளும் சேரில் அமர்ந்தவாறு கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் விஜய் சேதுபதி அமர்ந்திருப்பது போல் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

maharaja