
Cinema News
லோகேஷ் என்னங்க படம் பண்றாரு!.. எல்லாமே ஸ்டன்ட் மாஸ்டர் தான்!.. ஓப்பனா சொன்ன பிரபலம்!..
Published on
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான அத்தனை படங்களிலும் கதையை விட ஸ்டன்ட் காட்சிகள் தெறியாக இருக்க காரணமே அவரது படங்களில் பணியாற்றும் ஸ்டன்ட் மாஸ்டர்கள் தான் என சினிமா பிரபலம் ஒருவர் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.
ஒரு படத்துக்கு 6 ஃபைட் வச்சிட்டாலே போதும் என ஹீரோக்கள் நம்பி படங்களில் நடித்து வருகின்றனர். எத்தனை துப்பாக்கி, எவ்ளோ பெரிய கத்தி வச்சி ஷூட்டிங் நடத்துறோம் என்பது தான் இப்போ முக்கியமே, கதையெல்லாம் யார் சார் கண்டுக்கிறாங்க, ஸ்டன்ட் டைரக்டர் தான் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் ஆணிவேராக உள்ளனர் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விஜய்யோட கருடன் கதையில் அந்த காமெடி நடிகரா!.. வெற்றிமாறன் என்ன இப்படி பண்ணிட்டாரு!..
லியோ படத்தின் இடைவேளை சண்டை காட்சி மற்றும் கிளைமேக்ஸில் நடக்கப் போகும் 20 நிமிட சண்டைக் காட்சிகள் தான் படத்தின் ஹைலைட்டாக இருக்கப் போவதாக தயாரிப்பாளர் லலித் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சொல்லி வர காரணமே அன்பறிவ் மாஸ்டர்கள் தானாம்.
அதன் காரணமாகவே அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகும் ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தின் முதல் அறிவிப்பிலேயே லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த், அனிருத் பெயருக்கு அடுத்தபடியாக அன்பறிவ் மாஸ்டர்களின் பெயரும் இடம்பெறக் காரணமே அதுதான் என்கின்றனர்.
இதையும் படிங்க: கடைசியில என்ன பலிகடா ஆக்கிட்டானுங்க!.. கலவர பூமியான இசை கச்சேரி.. ரைமிங்கில் புலம்பும் ஏ.ஆர். ரஹ்மான்!..
சண்டை செய்து ஆக்ஷன் ஹீரோவாக மாறினால் தான் ஸ்டார் நடிகர்கள் என்கிற டிரெண்டை செட் செய்து விட்டனர். நல்ல நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை குடும்ப கதைகளை கொடுத்து எல்லாம் மகிழ்விக்கும் எண்ணம் ஹீரோக்களுக்கு சுத்தமாகவே இல்லை என்றும் ரசிகர்களும் அடிதடி, துப்பாக்கிச்சூடு, கத்தி, கடப்பாறை சண்டையைத்தான் விரும்புறாங்க என வலைப்பேச்சு அந்தணன் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.
நல்ல ஸ்டன்ட் காட்சிகளுக்கான கதையை லோகேஷ் அமைத்து விட்டாலே போதும், அன்பறிவ் தான் எல்லாத்தையும் பண்ணிடுறாங்க என்றும் வெளிப்படையாக பேசி திரையுலகத்தை அதிர வைத்துள்ளார்.
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...
Kantara Chapter 1: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்...
str 49 : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் படங்களில் நடிக்க இந்தியாவின் உள்ள முன்னணி நடிகர்கள்...
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. தனுஷ் இயக்கியுள்ள 4வது திரைப்படம் இது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ்,...