பிரச்சினை ஒரு பக்கம் இருந்தாலும் ஏணியாய் இருந்தவரை மறக்கலாமா? அஜித்துக்கு இருக்கும் பெரிய பொறுப்பு

Published on: September 12, 2023
ajith
---Advertisement---

Actor Ajith: இன்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெரிய அந்தஸ்தோடு இருக்கும் நடிகர் அஜித். கோலிவுட்டிலேயே அதிக ரசிகர்களை கொண்ட நடிகராகவும் இருந்து வருகிறார். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் பிற பொழுது போக்கு சார்ந்த விஷயங்களிலும் அஜித் மிகவும் ஈடுபாட்டுடன் இருக்கிறார்.

சினிமாவில் நடிக்க வரும் போதே ஒரு பைக் ரைடராக, கார் ரேஸராக இருந்த அஜித் இப்போது ட்ரோன் பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். அதுபோக துப்பாக்கி சுடுதல் பயிற்சியிலும் தன்னை அதிகளவில் ஈடுபடுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: லோகேஷ் என்னங்க படம் பண்றாரு!.. எல்லாமே ஸ்டன்ட் மாஸ்டர் தான்!.. ஓப்பனா சொன்ன பிரபலம்!..

இப்படி தனக்கான வாழ்க்கையை எண்ணம் போல் வாழ்ந்து வரும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. துபாயில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் அஜித் இன்று சினிமா உலகில் முடி சூடா மன்னனாக இருக்கிறார் என்றால் அவர் நடித்த ஒரு சில வெற்றிப்படங்கள்தான் காரணம். ஆரம்பத்தில் ஏதோ கிடைக்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த அஜித்துக்கு காதல் கோட்டை திரைப்படம் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ஆஸ்கர் நாயகனை திட்டாதீங்கப்பா!.. முதல் ஆளாக குரல் கொடுத்த பிரபல இசையமைப்பாளர்!.. அமைதி காத்த திரையுலகம்!..

அதிலிருந்தே வெற்றிப்படிகளை நோக்கி நகர ஆரம்பித்தார். அதன் பிறகு பிரபல மறைந்த தயாரிப்பாளரான எஸ்.எஸ்.சக்கரவர்த்தியுடன் இணைந்து பல படங்களில் நடித்தார் அஜித். அவரின் சினிமா கெரியரில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படங்கள் பெரும்பாலும் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிப்பில் உருவான படங்களாகவே இருக்கும்.

வாலி, முகவரி, வரலாறு, சிட்டிசன், ராசி, வில்லன் போன்ற 9 படங்களை எஸ்.எஸ்.சக்கரவர்த்தி அஜித்தை வைத்து தயாரித்தார். இதன் காரணமாகவே இருவருக்கும் இடையில் ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டது. ஆனால் இருவருக்கும் இடையில் என்ன பிரச்சினை நடந்தது என்றே தெரியவில்லை. இருவரும் பிரிந்து விட்டனர்.

இதையும் படிங்க: விஜய்யோட கருடன் கதையில் அந்த காமெடி நடிகரா!.. வெற்றிமாறன் என்ன இப்படி பண்ணிட்டாரு!..

இதனால் பல தயாரிப்பாளர்களின் பேச்சுக்கு ஆளானார் அஜித். சில மாதங்களுக்கு முன்புதான் சக்கரவர்த்தி காலமானார். ஆனால் அதற்கும் ஒரு மரியாதை நிமித்தமாக கூட அஜித் வரவில்லை. இப்படி இருக்க சக்கரவர்த்தி தன் மகனான ஜானி சக்கரவர்த்தியை வைத்து ரேணிகுண்டா என்ற படத்தை தயாரித்தார்.

ajith1
ajith1

அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் ஜானி சக்கரவர்த்தி வேறு எந்த படங்களிலும் நடிக்க வில்லை. அதனால் அஜித் நினைத்தால் சக்கரவர்த்தி இடத்தில் இருந்து அவரது மகனுக்கு ஏதாவது உதவி செய்யலாம் என்று கூறிவருகின்றனர்.