Connect with us

Cinema News

சந்திரமுகி பாம்பை அலற விட்ட அனகோண்டா!.. லைகா போட்ட ஸ்கெட்ச் எல்லாம் விஷால் முன் வீணாப்போச்சே!..

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் டிரைலரை பார்த்த உடனே எப்படியும் இந்த படத்துடன் மோதினால் சந்திரமுகி 2 சறுக்கலை சந்திக்கும் என்பதை கணித்த லைகா நிறுவனம் அதிரடியாக அந்த படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

மேலும், மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸை தடுக்க வேண்டும் என்கிற முயற்சியில் தீவிரம் காட்டி வந்த லைகாவுக்கு கடைசி நேரத்தில் உயர்நீதிமன்றத்தில் பல்பு வாங்கியது தான் மிச்சம்.

இதையும் படிங்க: ஆடத் தெரியாதவ மேடை கோணல்ன்னு சொன்னாளாம்!.. ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த டபுள் மோசடி!..

லைகா விடும் பல கோடி ரூபாயை அட்வான்ஸாக வாங்கிய விஷால் லைகா தயாரிப்பில் நடிக்க மறுத்த நிலையில் அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. எப்படியும் மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸை நிறுத்திவிட்டால் திட்டமிட்ட விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் சந்திரமுகி 2 படத்தை ரிலீஸ் செய்து விடலாம் என அனைத்து ஏற்பாடுகளையும் லைகா நிறுவனம் செய்திருந்தது.

ஆனால் அதே நாளில் நடிகர் விஷால், எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், ரித்து வர்மா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் அண்டனி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் ஒட்டுமொத்த ரசிகர்களும் அந்தப் படத்திற்கு தான் முதல் உரிமையை கொடுப்பார்கள் என்கிற கள ரிப்போர்ட்டுகள் அறிந்த லைகா நிறுவனம் அதிரடியாக சந்திரமுகி 2 ரிலீஸ் தேதியை மாற்றி இருப்பதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ரஜினி, விஜய், அஜித் கிட்ட இல்லாத பணமா!.. மக்கள் கிட்ட இன்னும் எவ்ளோதான் சுரண்டுவீங்க!.. நியாயமா விஷால்?..

நடிகர் விஷால் தொடர்ந்து தனது பட நிறுவனத்தின் பெயரில் எந்த ஒரு படத்திலும் நடிக்காத நிலையில், மற்ற தயாரிப்பாளர்கள் தயாரித்து வெளியிடும் படங்களை தடுக்க முடியாது என நீதிமன்றம் அதிரடியாக அறிவித்த நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு சோலோ ரிலீசாக மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாக உள்ள சந்தோசத்தில் நடிகர் விஷால் வேட்டி சட்டையுடன் புரோமோஷனில் பிஸியாகி உள்ள வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் தற்போது பதிவிட்டுள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top