Connect with us
sekar

Cinema News

பெத்த அப்பனுக்கு இப்படி ஒரு கஷ்டம்! கண்டுக்காத விஜய் – கேப்டன எங்க போய் நலம் விசாரிக்க போறாரு?

Actor Vijay : சமீபகாலமாக விஜய் மீது இருக்கும் பெரிய அதிருப்தி உடல் நலம் சரியில்லாத கேப்டனை மரியாதை நிமித்தமாக கூட சந்திக்கவில்லையே என்பதுதான். தான் இந்தளவுக்கு ஒரு உயரத்தை அடைந்திருக்கிறோம் என்றால் அதற்கு விதை போட்டது கேப்டன்தான் என நினைத்து பார்த்தாரா விஜய் என்று அவர் மீது ஏகப்பட்ட புகார்கள் ரசிகர்கள் தரப்பில் இருந்தும் கேப்டனை சார்ந்த சில பேரிடம் இருந்தும் வந்து கொண்டு இருக்கின்றன.

திரையுலகை சார்ந்த பல பேர் கேப்டனை அடிக்கடி சந்தித்து விட்டு தங்கள் ஆறுதல்களையும் வணக்கங்களையும் தெரிவித்து வந்த நிலையில் விஜய் ஒரு முறை கூட விஜயகாந்தை சந்திக்கவில்லையே என்று விஜய் மீது பெரும் வெறுப்பில் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: இவர நம்பி இவ்ளோ தூரம் வந்திருக்கோம்! கரை சேர்த்துருவாரா? சந்தேகப்பட்ட நாகேஷை பிரமிக்க வைத்த எம்ஜிஆர்

இந்த நிலையில் நேற்று விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு ஆடியோவை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதாவது எஸ்.ஏ.சிக்கு பல மாதங்களாகவே உடல் நிலையில் ஏதோ சில மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் அவருடைய எனர்ஜி லெவலும் குறைந்து விட்டதாகவும் உணர்ந்தாராம்.

உடனே மருத்துவரை அணுகி என்ன என விசாரித்ததில் ஸ்கேன் எடுத்துப் பார்த்தார்களாம். உடனே சர்ஜரி செய்ய வேண்டும் என மருத்துவர் சொல்ல நேற்றே சர்ஜரியும் செய்து கொண்டாராம். இன்று வீட்டிற்கு வந்து விட்டதாகவும் நலமுடன் இருப்பதாகவும் அந்த ஆடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: ரஜினியின் ஆசை… ஆடிப்போன பாலசந்தர்… கைக்கொடுத்த எம்.ஜி.ஆர்… அப்படி என்னங்க அது?

இந்த ஆடியோ வெளியிட்டதன் பின்னனி ரசிகர்களுக்காக அவர் கொடுத்த அறிவுரை என்றும் குறிப்பிட்டிருந்தார். அதாவது உடம்பு இப்படி இருக்கிறதே? எதாவது ஆகுமோ என்று தேவையில்லாத பயம் கொள்வதை விட உடனே செய்ய வேண்டியதை செய்து விட வேண்டும்.

எதையும் எதிர்மறையாக நினைக்காமல் நேர்மறையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். அதுதான் வாழ்க்கைக்கு அழகாகவும் இருக்கும் என ரசிகர்களுக்காக தன்னுடைய அறிவுரையை கூறினார்.

இதையும் படிங்க: தற்கொலை பண்ணிக்க நினைச்ச ரஜினிகாந்த்… நண்பர் சொன்ன கதையால் சூப்பர்ஸ்டாராக மாறிய ஆச்சரியம்!

ஆனால் ரசிகர்களோ ஒரு பக்கம் பெத்த பையன் இப்படி நம்மை எதிரி மாதிரி பார்க்கிறானா? என்று நினைத்து நினைத்துக் கூட இவருக்கு இப்படி ஆகியிருக்கும். ஒரு வேளை விஜய் வந்து சந்தித்து பேசினால் எஸ்.ஏ.சியின் மனம் குளிர்ந்து விடும் என்று கூறி வருகிறார்கள். ஆனால் விஜய் அப்படி செய்யமாட்டார். பெத்த அப்பனுக்கே இந்த கதினா மத்தவங்களுக்கு!

 

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top