latest news
முதல் பாதி மரண மொக்கை!.. எஸ்.ஜே. சூர்யா இல்லைன்னா சேகரு செத்துருப்பான்.. மார்க் ஆண்டனி எப்படி இருக்கு?
Mark Antony Review: விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் திரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ள டைம் டிராவல் கேங்ஸ்டர் திரைப்படம் தான் இந்த மார்க் ஆண்டனி.
பாட்ஷா படத்தில் வில்லன் மார்க் ஆண்டனிக்கு எந்தளவுக்கு வெயிட் இருக்குமோ அதே போல இந்த மார்க் ஆண்டனி திரைப்படமும் வெயிட்டாகத்தான் உள்ளது. ஆனால், முதல் பாதி மட்டும் கொஞ்சம் மொக்கை என்றும் இரண்டாம் பாதி வேற லெவல் ஃபன் ரோலர் கோஸ்டர் என ரசிகர்கள் மார்க் ஆண்டனி படத்திற்கு கொடுத்துள்ள விமர்சனங்களை இங்கே பார்க்கலாம்..
எஸ்.ஜே. சூர்யா தான் சேவியர்:
மார்க் ஆண்டனி படத்தின் ரியல் ஹீரோவே எஸ்.ஜே. சூர்யா தான் என்றும், விஷால் எவ்வளவோ முயற்சித்தாலும், எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பை ஒரு சீனில் கூட மிஞ்ச முடியவில்லை என்றும் ரசிகர்கள் எஸ்.ஜே. சூர்யா தான் சேவியர் என்றும் ஷோ ஸ்டீலர் என்றும் கொண்டாடி வருகின்றனர்.
ரோகிணி தியேட்டரில் எஸ்.ஜே. சூர்யா:
ரோகிணி தியேட்டரில் மார்க் ஆண்டனி படத்தின் FDFS காட்சியை பார்க்க இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் எஸ்.ஜே. சூர்யா தியேட்டருக்கு வந்த நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்களும் எஸ்.ஜே. சூர்யாவை பார்த்து சந்தோஷத்தில் கூச்சலிட ஆரம்பித்து விட்டனர். மார்க் ஆண்டனி வசனத்தை ரசிகர்கள் முன்பு பேசி காண்பித்து அனைவரையும் உற்சாகப்படுத்தினார் எஸ்.ஜே. சூர்யா.
மொரட்டு ஃபன்:
மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இரண்டாம் பாதி மொரட்டு ஃபன் என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார். விஷாலின் நடிப்பில் இது பெஸ்ட் படம் என்றும் எஸ்.ஜே. சூர்யா மனுஷன் பிச்சிட்டாரு என்றும் ஜிவி பிரகாஷின் பிஜிஎம் தாறுமாறு என விமர்சனத்தை கொடுத்துள்ளார்.
ஃபர்ஸ்ட் ஹாஃப் மொக்கை:
மார்க் ஆண்டனி திரைப்படத்தின் முதல் பாதி மரண மொக்கையாக மாறிவிட்டது என்றும் படத்தையே தனியாளாக நின்று தாங்கிப் பிடித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தியதே எஸ்.ஜே. சூர்யா தான். அவர் இல்லை என்றால், இந்த படம் ஊத்தியிருக்கும் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.