
Cinema News
தன் மகளுக்கு நோ சொன்ன ராதிகா… வரலட்சுமிக்கு மட்டும் தாராளம் காட்டிய அதிசயம்.. அப்படி என்ன சேதி?
Published on
By
Radhika Varalakshmi: நடிகை ராதிகா தன்னுடைய மகள் ரேயானுக்கு நோ சொன்ன ஒரு விஷயத்தை வரலட்சுமியினை காட்டாயப்படுத்தி செய்ய வைத்து இருக்கிறார். இதுகுறித்த சுவாரஸ்ய தகவல்கள் தற்போது இணையத்தினை வலம் வர துவங்கி இருக்கிறது.
நடிகவேள் எம்.ஆர்.ராதாவிற்கு மகளாக பிறந்தவர் ராதிகா. ஆனால் அவர் இந்தியாவில் வளரவில்லை. பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிகையாக எண்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே நல்ல நடிப்பை வெளிப்படுத்த அவருக்கு பல வாய்ப்புகள் வந்தது.
இதையும் வாசிங்க: என் படத்தை எனக்கே போட்டு காட்டினாலும் நீதான்டா அடுத்த ஆடு! ‘ஜவான்’ வெற்றி கமலை எப்படியெல்லாம் மாத்திடுச்சு?
தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தவர். ஒரு கட்டத்தில் சீரியல்களில் கவனம் செலுத்தி வந்தார். இவர் ஏற்கனவே இரண்டு முறை விவகாரத்து ஆன நிலையில் 2001ல் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துக்கொண்டார். முதல் திருமணத்தில் இவருக்கு ரேயான் என்ற மகள் இருக்கிறார்.
தான் பெரிய நடிகையாக வலம் வந்த போதிலும் ரேயானை நடிப்புக்குள் இறக்கவே ராதிகா விரும்பவில்லையாம். ஆனால் அவரின் கணவர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி நடிக்க ஆசைப்பட்டு இருக்கிறார். இதை தனது தந்தை சரத்குமாரிடம் சொன்னபோது முடியவே முடியாது எனக் கூறிவிட்டார்.
இதையும் வாசிங்க: ரஜினி இமேஜை காலி பண்ண போகும் லால் சலாம்!.. மகளுக்காக மாட்டிக்கொண்டு முழிக்கும் தலைவர்!..
ஆனால் வரலட்சுமியை அவரின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே கூட்டிச்சென்ற ராதிகா ஏன் நடிக்க கூடாது என சண்டையிட்டு இருக்கிறார். இதனால் சரத்குமாருக்கே என்ன சொல்வது என்றே தெரியவில்லையாம். ஒரு கட்டத்தில் சரி என ஒப்புக்கொண்ட பிறகே போடா போடி படத்தில் எண்ட்ரி கொடுத்து இருக்கிறார்.
தொடர்ச்சியாக பெரிய பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் வரலட்சுமி கோலிவுட்டில் தனக்கான இடத்தினை பிடித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது தமிழ், மலையாளம், கன்னடா, தெலுங்கு என ஒரே நேரத்தில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விமர்சகர்கள் வைத்த ஆப்பு : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினி. 75 வயதை கடந்தும் இன்றும் ரஜினி தமிழ்...
STR49: சின்ன வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரின் அப்பா டி. ராஜேந்தர் இவரை சிறுவயதிலேயே சினிமாவில்...
கோட் படத்தில் நடித்து கொண்டிருந்தபோதே தான் அரசியலுக்கு வரப்போவதாக விஜய் அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி...
KPY Bala: கேபிஒய் பாலா குறித்து தொடர்ந்து பல சர்ச்சைகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அதுவும் பத்திரிக்கையாளர் உமாபதி ஒரு பெரிய...
இளம் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Leo, coolie ஆகிய இரண்டு படங்களாலும் அருக்கு இருந்த...