ஒரே வருஷத்துல 3000 கோடியா!.. பலே ஆளா இருக்காரே இந்த பாலிவுட் பாட்ஷா.. அடுத்த சம்பவம் லோடிங்!..

Published on: September 16, 2023
---Advertisement---

3 ஆண்டுகளாக புதிய படங்களை கொடுக்காமல் கேப் விட்டு வந்த ஷாருக்கான் தொடர்ந்து 3 படங்களை ஒரே ஆண்டில் ஒட்டுமொத்தமாக இறக்கி வசூல் வேட்டை நடத்த முடிவு செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தென்னிந்திய திரைப்படங்களை ரீமேக் செய்து பாலிவுட்டில் பல படங்கள் கடந்த சில ஆண்டுகளாக வெளியான நிலையில் எந்த ஒரு படமும் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை.

இதையும் படிங்க: நான் ஒரு மனநோயாளி! எப்படிப்பட்டவன் தெரியுமா நான்? மாரிமுத்துவின் பேச்சைக் கேட்டு ஆடிப்போன நிருபர்

சல்மான்கான், அமீர்கான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் பல கடந்த மூன்று ஆண்டுகளில் வெளியான நிலையிலும் ஒரு படம் கூட வசூல் வேட்டையை நடத்தவில்லை. அதற்கு பதிலாக தென்னிந்திய படங்களான பாகுபலி, புஷ்பா, கே ஜி எஃப் 2, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை இந்தி பெல்ட்டிலும் பெற்றன.

இதையும் படிங்க:  அத மூட பாவாட தாவணி பத்துமா செல்லம்?!.. பாதிய மறச்சி மீதிய காட்டும் ரேஷ்மா!.

இந்நிலையில், படுகுழியில் இருந்த பாலிவுட்டின் பெயரை இந்த ஆண்டு ஜனவரி மாதம் பதான் படத்தின் மூலம் மீண்டும் தூக்கி நிறுத்தினார் ஷாருக்கான். கடந்த மூன்று ஆண்டுகளாக ஷாருக்கானின் எந்த ஒரு படமும் வெளியாகாத நிலையில், பதான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. ஆயிரம் கோடி ரூபாய் வசூலை அந்த படம் குவித்த நிலையில், அடுத்த படத்தை அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்வார் என பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், கடந்த செப்டம்பர் ஏழாம் தேதி ஜவான் திரைப்படத்தை வெளியிட்டு இதுவரை 700 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளார். இந்த வாரம் முடிவில் அட்லி இயக்கிய ஜவான் திரைப்படமும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் படமாக மாறும் என எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் தான் முதல்வர்… 19 ஆண்டுக்கு முன்னர் கணித்த பட்டுக்கோட்டையார்… இந்த பாடல் தானா?

இந்நிலையில், 3 இடியட்ஸ், பிகே படங்களை இயக்கிய பாலிவுட்டின் பிரபல இயக்குனர் ராஜ்குமார் இராணி இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் டாப்ஸி அடித்துள்ள டன்கி திரைப்படம் அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு அந்த படம் வெளியாக போவதாக தற்போது பாலிவுட்டே அதிரும் அளவுக்கு அப்டேட்கள் வெளியாகியுள்ளன.

ஒரே ஆண்டில் அடுத்தடுத்து மூன்று படங்களை இறக்கி ஹாட்ரிக் ஆயிரம் கோடி வெற்றியை பெற்று 3000 கோடி வசூலை ஈட்டப் போகிறாரா ஷாருக்கான் என பாலிவுட்டே பெரிய கண்ணாக வைத்துள்ளது.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.