முதல் நாள் ரிசல்ட்டை தாங்க முடியாம புலம்பிய தயாரிப்பாளர்! என்.எஸ்.கே செய்த மேஜிக் – படமோ ஓஹோ வெற்றி!…

Published on: September 21, 2023
nsk
---Advertisement---

Actor NS Krishnan: தமிழ் திரையுலகில் சிறந்த நகைச்சுவை நடிகராகவும் ஒரு பாடகராகவும் வலம் வந்தவர் நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன். சமூகக் கருத்துக்கள் கொண்ட வசனங்களை தனக்கே உரித்தான பாணியில் சொல்லி ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு மட்டுமில்லாமல் சிந்திக்கவும் வைத்தவர் என்.எஸ்.கே.

நகைச்சுவை மூலம் ஒருவரை சிரிக்க வைக்கவும் முடியும். அதே நகைச்சுவையால் ஒருவரை அழ வைக்கவும் முடியும். ஆனால் என்.எஸ்.கே பிறர் மனம் புண்படாத வகையில் நகைச்சுவைகளை அள்ளி அள்ளி வழங்கினார்.

இதையும் படிங்க: முதல் சம்பளத்தில் எஸ்.ஜே.சூர்யா செய்த செயல்!… மனுஷன் இவ்வளவு தங்கமானவரா!..

சிந்தனைக் கருத்துக்களை நகைச்சுவை மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தியதன் மூலம் 50 ஆண்டுகளை கடந்தும் என்.எஸ்.கே இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். எம்ஜிஆர் என்.எஸ்.கேவை தன்னுடைய ஆஸ்தான குருவாகவே ஏற்று கொண்டவர்.

என்.எஸ்.கே எப்பொழுதும் இல்லாதவர்க்கு ஓடிப் போய் உதவி செய்யக் கூடியவர். இந்த ஒரு குணம் எம்ஜிஆருக்கு என்.எஸ்.கேவிடம் இருந்துதான் வந்தது. அந்த வகையில் ஒரு படத்தின் தோல்வியை தன்னுடைய நகைச்சுவை மூலம் ஜெயிக்க வைத்தவர் என்.எஸ்.கே.

இதையும் படிங்க: அம்பானி வீட்டில் அட்லீக்கு இவ்ளோ பெரிய மரியாதையா? ‘ஜவான்’ தந்த பரிசா? மனைவியுடன் கலர்ஃபுல்லான லுக்

1938 ஆம் ஆண்டு வெளியான படம் பக்த நாமதேவர். திரௌபத் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீநிவாசன், மாஸ்டர் கண்ணப்பன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.  ஆனால் படம் ரிலீஸான முதல் நாளில் தியேட்டரில் படத்தின் தயாரிப்பாளரை தவிர வேறு யாரும் இல்லையாம்.

இதனால் மனம் நொந்த அந்த தயாரிப்பாளர் மனவேதனையில் புத்தி தடுமாறி என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து போனாராம். இவரின்  நிலைமையை அறிந்த என்.எஸ்.கே மறுநாள் அந்தப் படத்தை வந்து பார்த்திருக்கிறார்.

இதையும் படிங்க: லோகேஷின் தம்பியா இந்த பிரபல நடிகரின் வாரிசு? என்னப்பா சொல்றீங்க? சீக்ரெட்டை பகிர்ந்த நடிகர்

உடனே அந்தப் படத்தில் சில நகைச்சுவை காட்சிகளை வைத்து வெளியிட்டால் படம் நன்றாக ஓடும் என கருதி அதற்கேற்றவாறு வசனங்களை அவரே எழுதி தன்னுடைய ஒரு இயக்குனரை வைத்து சில காட்சிகளை படமாக்கி அந்தப் படத்தில் சேர்த்து வெளியிட்டிருக்கிறார்.

படம் தாறுமாறாக ஓடியதாம். அதன் மூலம் கிடைத்த வசூலை தயாரிப்பாளர் என்.எஸ்.கேயிடம் வந்து  கொடுக்க அதற்கு என்.எஸ்.கே ‘சினிமாவை நம்பி வந்தவன் யாரும் கஷ்டப்படக் கூடாது. ஆகவே இது உன்னுடைய பணம். நீயே வைத்துக் கொள்’ என்று சொல்லி அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டாராம் என்.எஸ்.கே.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.