Cinema News
உங்க மார்கெட்ட தக்கவச்சுக்கனும்னா தயவுசெஞ்சு இத செய்யாதீங்க! விஜய்க்கு இப்படி ஒரு அட்வைஸா?
Lingusamy advise: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். அவரின் நடிப்பில் லியோ படம் மக்கள் மத்தியில் பெரும் ஹைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்தமாதம் ரிலீஸ் ஆக இருக்கும் லியோ படத்தின் அப்டேட்டுகள் நாளுக்கு நாள் வெளியாகி ரசிகர்களை ஒரு எதிர்பார்ப்பிலேயே இருக்க வைக்கின்றது.
லியோ படத்திற்கு பிறகு விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் தனது 68 வது படத்தில் இணைகிறார். அந்தப் படத்திற்கான வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தளபதி68 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு கூடுதலாகவே இருக்கின்றது.
இதையும் படிங்க: ‘அயலான்’ படத்தில் இவங்களும் இருக்காங்களா? 23 வருஷம் கழிச்சு ரீஎண்ட்ரியில் கலக்க வரும் விஜய் பட நடிகை
இப்படி தொடர்ந்து தன் படங்களின் மூலம் விஜய் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் எப்படி இவரால் மட்டும் இந்தளவுக்கு ஒரு மாஸை கொடுக்க முடிகின்றது என யோசிக்க வைக்கின்றது. விதவித கெட்டப்கள் போட்டு நடிப்பதும் இல்லை. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பதும் இல்லை. ஆனால் விஜய் படம் என்றாலே ஒரு ஹைப் அதிகரித்து விடுகின்றது.
இதைப் பற்றி சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி தன் பேட்டியின் மூலம் கூறியிருக்கிறார். கூடவே விஜய்க்கும் தன் அறிவுரையை வழங்கியிருக்கிறார். அதாவது ‘காலந்தோறும் எல்லா ரசிகர்களையும் கவரக்கூடிய நடிகன் தேவைப்படுகிறான். அந்த இடத்தை தற்போது விஜய் நிரப்பி வருகிறார்.’
இதையும் படிங்க: லியோ கதை இப்படித்தான் இருக்கும்!.. போஸ்டர்களிலேயே பொடி வைத்த லோகேஷ் கனகராஜ்.. செம தில்லுதான்!..
‘ இதையெல்லாம் யாரும் திட்டம் போட்டு அமைக்க முடியாது.சிலருக்கு அது தானாகவே அமையும். விஜய்க்கு இருக்கும் நல்ல சிந்தனையும் செயல்முறையும் தான் இப்படி ஒரு இடத்தை அவருக்கு பெற்றுத் தந்திருக்கிறது. ’
‘ விஜய் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கலாம் என்று பல பேர் சொல்கிறார்கள். அதில் எனக்கு எந்தவித உடன்பாடும் கிடையாது.இந்த சினிமாவில் எல்லாரையும் நன்கு புரிந்து கொண்டு எல்லாவற்றையும் தெரிந்து தன்னால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பவர் விஜய்.’
இதையும் படிங்க:என்னய்யா சொல்றீங்க? ‘ரஜினி171’ அவருக்கு சொல்லப்பட்ட கதையா? நட்புனா என்னனு காட்டிட்டாரே
‘இந்தப் போக்கை அப்படியே விஜய் தொடரவேண்டும் என்பதுதான் என் எண்ணம். இந்த சூழ்நிலையில் அவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது. அதற்கு இன்னும் நாள்கள் இருக்கின்றது’ என்று கூறியிருக்கிறார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் விஜயை வைத்து ஒரு படம் கூட எடுக்காத லிங்குசாமி விஜயின் மீது எந்தளவு ஒரு நல்ல அபிப்ராயத்தை வைத்திருக்கிறார் என்பது இதிலிருந்தே தெரிகிறது.