விஜய் ஆண்டனியால் தான் மீரா இறந்தாரா? காசுக்காக கண்டப்படி பேசும் பயில்வான்… கழுவி ஊற்றிய ரசிகர்கள்!

Published on: September 22, 2023
---Advertisement---

Meera Vijay Antony: தமிழ் சினிமா பிரபலம் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இறப்பு மொத்தமாக எல்லாரையுமே உலுக்கி விட்டது. சின்ன வயதில் அதுவும் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மீரா எடுத்த முடிவால் பலரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

கோலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. புரியாத வார்த்தைகளை போட்டு டாப் ஹிட் பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்தார். அவரின் எல்லா படங்களுமே ஹிட் பாடல்களை கொண்டு இருக்கும். 

இதையும் படிங்க: ஜெயலலிதா மட்டும் அத செய்யலைனா ரஜினியின் நிலைமை? ரெட் கார்டு சம்பவத்தில் உண்மையை போட்டுடைத்த பிரபலம்

க்ரைம் த்ரில்லர் படமான நான் படத்தின் மூலம் நடிகராக எண்ட்ரி கொடுத்தார் விஜய் ஆண்டனி. அப்படத்தினை தொடர்ந்து, சலீம் படத்திற்கு தானே இசையமைத்து நடிக்கவும் செய்தார். இரண்டு படங்களுமே நல்ல வெற்றியை பதிவு செய்தது.

இயக்குனர் சசியுடன் இணைந்து ஆக்‌ஷன் த்ரில்லரான பிச்சைக்காரன் படத்தில் நடித்தார். படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. தொடர்ச்சியாக எமன், அண்ணாதுரை, இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் மிகப்பெரிய விபத்தில் சிக்கி விஜய் ஆண்டனி உயிர் தப்பினார். அதுவே பலருக்கு அதிர்ச்சியாகி இருந்த நிலையில் தற்போது அவரின் 17 வயது மகள் மீராவின் தற்கொலை பலருக்கும் மிகப்பெரிய ஷாக்கை கொடுத்து இருக்கிறது.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மானால் பறிபோன படவாய்ப்பு.. காலை வாரிய துருவ் விக்ரம்.. ஹிட்டு கொடுத்தும் புலம்பும் இயக்குனர்…

இந்நிலையில், விஜய் ஆண்டனி தன்னுடைய படங்களுக்கு எமன், சைத்தான், காளி, திமிரு பிடிச்சவன் போன்று நெகட்டிவ் டைட்டில்களே வைக்கிறார். இப்படி செய்யும் போது அது வாழ்க்கையிலும் இருக்கும். அதனால் தான் விபத்தில் சிக்கினார். தற்போது மகளும் இறந்து விட்டார்.

அவரால் தான் இப்படி வாழ்க்கை ஆச்சு என பயில்வான் ரங்கநாதன் பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஏன்யா காசுக்காக கண்டதையும் பேசுவியா? சாவுல கூட இப்டி பேசலாமா என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.