எல்லாம் ஒரு சூட்சமம்தான்! அடுத்தப்படத்திற்கு பக்காவா ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அஜித் – இதுக்குத்தான் அந்த புகழாரமா?

Published on: September 23, 2023
aadhik
---Advertisement---

Ajith’s Next Movie: அஜித் தற்போது பைக் பயணத்தை முடித்துக் கொண்டு இரண்டு தினங்களுக்கு முன்புதான் சென்னை வந்தார். அது குறித்த வீடியோவும் வைரலானது. இதனையடுத்து விடாமுயற்சி படத்திற்காக அஜித் தயார் படுத்த உள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான படம் மார்க் ஆண்டனி. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கினார். ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் இருபடங்களை இயக்கியவர். ஒரு சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: எப்பா இது ஆடியோ லாஞ்ச் இல்ல! கட்சி மாநாடு – இப்படி ஒரு ப்ளானோடு விஜய் இருப்பாருனு எதிர்பார்க்கல

மார்க் ஆண்டனியின் வெற்றியை அஜித் சாருக்கு சமர்ப்பிக்கிறேன் என்று படம் ஆரம்பித்ததில் இருந்து வெற்றி விழாவை கொண்டாடிய வரைக்கும் அஜித்தின் புகழையேத்தான் ஆதிக் பாடிக் கொண்டிருந்தார்.

ஆனால் அதற்கு பின்னாடி இப்படி ஒரு ப்ளான் இருக்கும் என யாருக்குமே தெரியாது. அதாவது நேர்கொண்ட பார்வை படத்தில் ஆதிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அப்போது அஜித்துடன் பழகும் வாய்ப்பு ஆதிக்கிற்கு கிடைத்திருக்கிறது. அதே சமயம் அஜித்திடம் ஒரு கதையையும் கூறினாராம் ஆதிக்.

இதையும் படிங்க: எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்… வேதனையில் புலம்பும் மார்க் ஆண்டனி நடிகர்…

அந்தக் கதை அஜித்திற்கு மிகவும் பிடித்துப் போக சேர்ந்து பண்ணலாம் என சொல்லியிருக்கிறார். மேலும் ஆதிக் மார்க் ஆண்டனியை பற்றி கூறும்போதெல்லாம் அஜித் சார்தான் நீ போய் பெரிய படம் பண்ணு என எனக்கு தூண்டுகோலாக இருந்தார் என்று சொல்லியிருப்பார்.

ஆனால் உண்மையிலேயே ஒரு இயக்குனர் ஒரு  பெரிய படத்தை கொடுத்தால்தான் அஜித்தை வைத்து  படத்தை எடுக்க முடியும் என்ற நிலைமைக்கு பல தயாரிப்பு நிறுவனங்கள் வந்து விட்டது. அதை மனதில் வைத்தே தான் அஜித் அந்த ஒரு வார்த்தையை கூறியிருப்பதாக கோடம்பாக்கத்தில் கூறிவருகிறார்கள்.

இதையும் படிங்க: பாத்ரூம் ரெண்டு பேருக்கும்! பூவே உனக்காக சீரியலில் இருந்து விலக காரணமே இதுதான் – அசீம் குறித்து பிரீத்தி சொன்ன தகவல்

ஆனால் பெரிய படம் என்பதையும் தாண்டி ப்ளாக் பஸ்டர் படத்தையே கொடுத்திருக்கிறார் ஆதிக். அதனால் அஜித்தின் அடுத்த படம் ஒரு வேளை ஆதிக் இயக்கும் படமாகக் கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.