Cinema News
எப்பா ஒரு முடிவுக்கு வாங்கப்பா!.. ரசிகர்களை குழப்பும் விடாமுயற்சி டீம்!.. பின்னணியில் இருப்பது யார்?…
Vidamuyarchi: துணிவு படம் வெளியாகி 8 மாதங்கள் ஆகியும் அஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை துவங்கப்படவில்லை. அஜித் படம் என்றாலே அது தாமதம்தான் என ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு அவரின் படங்களின் நிலை இருக்கிறது. வலிமை படமும் இப்படித்தான் அவரின் ரசிகர்களை காக்க வைத்தது.
அஜித்துக்கு சினிமா என்பது தொழில் மட்டுமே. அவருக்கு மிகவும் பிடித்தது பைக்கை எடுத்து கொண்டு பல ஊர்களுக்கும் போவது. தற்போது பைக்கில் உலகை சுற்றி வந்து கொண்டிருக்கிறார். கிடைக்கும் நேரத்தில் அவ்வப்போது விடாமுயற்சி படம் பற்றியும் யோசித்து வந்தார். இதனால்தான் இந்த படம் தாமதமாகி வந்தது.
இதையும் படிங்க: அவர பாக்குறதே கஷ்டம்! பாத்துட்டா? டான்ஸ் கத்துக்க வந்த அஜித்தை பற்றி கலா மாஸ்டர் கூறிய சூப்பரான தகவல்
விடாமுயற்சி பட அறிவிப்பு வெளியாகியே 4 மாதங்களுக்கும் மேல் ஆகிறது. ஆனால், இப்போது வரை படப்பிடிப்பு துவங்கப்பட்டவில்லை. இதில், இயக்குனர் மகிழ்திருமேனி நிலைமைதான் பாவம். பல கதைகளை உருவாக்கி அஜித்துக்கு பிடிக்காமல் ஒருவழியாக இப்போது ஒரு கதை ஓகே ஆகியுள்ளது. இந்த கேப்பில் அவர் ஒரு படத்தையே இயக்கி முடித்திருப்பார். ஒரு படத்தின் படப்பிடிப்பு இப்போது துவங்குகிறது.. அப்போது துவங்குகிறது என தொடர்ந்து மாறி மாறி செய்து வெளியாகி அதுவும் நடக்காமல் போனது விடாமுயற்சி படத்தில்தான். இப்படியே கடந்த 3 மாதங்கள் ஓடிவிட்டது. அஜித் ரசிகர்களும் டயர்ட் ஆகிவிட்டனர்.
முதலில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது என்றனர். அதன்பின் ஹைதராபாத் என்றனர். அதன்பின், புனே என்றனர். இப்படியே மும்பை, ஹாங்காங், லண்டன், துபாய், அபுதாபி என பல ஊர்களின் பெரும் அடிபட்டது. இப்போது அபர்பைசான் என சொல்லியுள்ளனர். இதற்காக படக்குழு அங்கு சென்று ஒரு மாதம் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: அப்பாடி இப்பவாது மனசு வந்துச்சே… அஜித்தின் திடீர் செயல்… கலக்கத்தில் இருந்த மகிழ் திருமேனியே குஷி ஆகிட்டாரு!
அபுதாபியில் படப்பிடிப்பு என சொல்லப்பட்டதால் அங்கு சென்ற அஜித் டிரைவிங் லைசென்ஸுக்கு விண்ணப்பித்து அதை பெற்றார். கேட்டால் பாலைவனத்தில் சண்டை காட்சி எடுக்கப்படுவதாக சொன்னார்கள். இப்போது அபர்பைசானுக்கு மாறியுள்ளனர். கேட்டால், அங்கு அழகான இடங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இதற்கு பின்னால் இருப்பது அஜித்தா?.. இயக்குனரா? இல்லை தயாரிப்பாளர் தரப்பா என்பதுதான் தெரியவில்லை.
இப்படி மாறி மாறி செய்திகள் வெளியாவதே இப்படத்திற்கு பெரிய மைன்சாக அமைந்துள்ளது. ஒரு ஸ்திரத்தமை இல்லமால் ஒரு கதை இவ்வளவு இடங்களில் எங்கு வேண்டுமானாலும் நடக்குமென்றால் ‘அது கதையா இல்லை களிமண்ணா?’ என யோசிக்க தோன்றுகிறது. இதுவே இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை குறைக்கும் என்பது இவர்களுக்கு ஏன் புரியவில்லை என பலரும் கேட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அந்த படத்த தூக்கி நம்ம படத்துல சொருவு!.. இப்படி ஆயிட்டாரே அஜித்!.. விளங்குமா விடாமுயற்சி?!…